முன்னுரை நம் ஆகார வாயை சுத்தம் செய்வது போலத்தான் நம் ஆசன வாய் சார்ந்த மலக்குடலை சுத்தமாக்க எனிமா என்ற முறையைப் பயன்படுத்துகிறோம். நம்மில் நிறைய பேர்கள் எனிமா எடுப்பது பற்றி பேசினாலே "அய்யோ! நான் அதற்கு உடன்படமாட்டேன்" என்று கூறுவதுதான் அதிகமாக நிகழ்கிறது. ஒன்றை நான் புரிய வைக்கப் போகிறேன். நமது வாய் மற்றும் பற்களை நாம் அன்றாடம் சுத்தம் செய்யாவிட்டால் அது நம் மலத்தைவிட அதிகமாக துர்வாடை வீசும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அப்படியெல்லாம் இல்லை என்று நினைக்கும் உங்களுக்கு நான் தரும் விளக்கம் என்ன வென்றால், நாம் நமது வாயைத்தான் அதிகமாக திறந்து வைக்கிறோம் (சாப்பிடும் போதும் சதா பேசும் போதும்). ஆனால், நம் ஆசன வாயைக் காலைக்கடன் கழிக்கும் போதுதான் திறக்கிறோம். ஆகவே, நம் வாய்தான் அதிகமாகக் கெட வழியிருக்கிறது. சரி அதை விடுங்கள், நாம்தான் தினமும் காலைக் கடன் மூலம் மலக்குடல் கழிவை வெளியேற்றுகிறோமே அப்புறம் எதற்கு தனியாக எனிமாவெல்லாம் என்று கேட்பது புரிகிறது. நாம் தினமும் மலம் கழித்தாலும் உண்மையில் நாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேங்கிய உடக் கழிவைத்தான் வெளியேற்றுகிறோம். நம் அதிகம் சாப்பிடும் பசை போன்ற மாவுச் சத்தும் சக்தி குறைவான கழிவு அதிகம் கொண்ட உணவுகளும் நம்மில் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், போதிய சக்தி கிடைக்காமையால் நாட்பட்ட உடற்கழிவைத்தான் நாம் வெளியேற்றுகிறோம். நமக்கு மலச்சிக்கல்தான் ஆதி நோயாகவும் அதனிலிருந்து வருபவைதான் மீதி நோய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மலச்சிக்கல் நோய்கள் வரவேண்டாமாயின் நாம் எனிமா எடுப்பது மிகவும் அவசியம். அது பற்றி இனி விரிவாகப் பார்ப்போம். எனிமா எடுக்க இயற்கை வைத்திய மையங்களில் ஒரு பிலாஸ்டிக் குடுவை (Tumbler) விற்கிறார்கள். அது சுமார் 300 மில்லி லிட்டர் அளவு கொள்ளளவு கொண்ட அந்தக் குடுவையில் நாம் குடிக்கும் தண்ணீரை நிரப்பி நம் தோள் உயரத்திற்கு கட்டித்தொங்க விடவேண்டும். பின்னர் அந்தக் குடுவையோடு இனைக்கப்பட்ட இரப்பர் குழாயின் நீர்க்குமிழிகளை (Air bubbles) வெளியேற்றிவிட்டு அதன் நுனியை (Nossle) சற்று குனிந்த வாகில் நம் ஆசன வாயில் சொருகிக்கொள்ள வேண்டும். இப்பொழுது குடுவைத் தண்ணீரானது நம் மலக்குடலில் மெல்ல மெல்ல ஏறும். தண்ணீர் முழுவதுமாக ஏறியபின் நுனியை வெளியெடுத்துவிட்டு ஆசன வாயை இருக்கமாக வைத்துக்கொண்டு பத்து நிமிடங்கள் படுத்த நிலையில் ஓய்வாக இருக்க வேண்டும். அப்படி படுத்து இருக்கும் போது நம் பெருங்குடலில் ஏற்றிய தண்ணீரானது அதன் வளைவுகளில் ஊறிப் புகுந்து மலக்கழிவை கரைத்து வெளிக்கொண்டுவரத் தயாராய் இருக்கும். இப்பொழுது எழுந்து மலம் கழிக்கும் போது பெருங்குடலின் கனிசமானக் கழிவு வெளி வந்துவிடும். இதுவே எனிமா எடுக்கும் முறையாகும். எனிமா எடுப்பதால் ஏற்படும் அற்புத நன்மைகள் சக்தி செலவின்றி உடல் கழிவு நீக்கம்: கழிவாக இருந்தாலும் உடலில் இருந்து வெளியேற்ற உடலானது தன் சக்தியை செலவு செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக கழிவு அதிகமாகவும் சக்தி குறைவாகவும் கொண்ட உணவை நாம் எடுத்துக் கொள்ளும் போது சக்தி போதாமையால் கழிவு வெளியேற் முடியாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் உடல் சக்தி செலவின்றி கழிவு வெளியேற்றம் செய்ய எனிமா உதவியாக இருக்கும். இப்படி எனிமா எடுப்பதால் உடலில் சக்தி மிச்சப்பட்டு புத்துணர்வு கிடைக்கிறது. உடற்கழிவு நொதித்து கெடுவதற்குமுன் நீக்கம் செய்யப்படுகிறது: உடலின் கழிவு பெருங்குடலில் சேர்ந்தவுடன் நீக்கப்படுவதால் அது நொதித்து, புளித்து, நுரைத்து கிருமியை வரவழித்து உடல் நலனை சீர்கெட வைப்பதை தவிர்க்கிறது. இதனால், நோய் வளர்வது குறைகிறது. உடல் உஷ்ணம் தனிப்பு: பெருங்குடலின் இருக்கம் தளர்த்தப்படுவதால் உடலின் கனிசமான உஷ்ணம் தனிக்கப்படுகிறது. இதனால், கல்லீரல் இரணம் தவிர்க்கப்பட்டு, கொழுப்புச் செரிமானம் சிறப்பாக நடந்தேற வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் பயனாய் கெட்டக் கொழுப்பு உடலில் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இலகுவான வாய்வு வெளியேற்றம்: நம் உடலில் வாய்வானது சிறு குடலில் அதிகமாக சிக்கியிருக்கும். எனிமா மூலம் பெருங்குடலின் கழிவு நீக்கப்படுவதால், சிறுகுடல் கழிவு இலகுவாக பெருங்குடலில் இறங்கி வருகிறது. இதனால் சிறுகுடல் வாய்வும் இலகுவாக வெளியேற்றம் செய்யப்படுகிறது. இவ்விதமான சிறுகுடல் வாய்வு வெளியேற்றத்தால் மாரடைப்பு நிகழ்வுகள் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல் சுமை குறைதல்: பெருங்குடல் இருக்கத்திற்கும் நுரையீரல் செயல் திறனுக்கும் சக்தியோட்டத் தொடர்பு இருக்கிறது. பெருங்குடலின் பாரம் குறைக்கப்படும் போது நுரையீரலின் செயல்திறன் சிறப்படைகிறது. நுரையீரல் மற்றும் மூச்சுக் குழல் பிரச்சனை உள்ளவர்கள் எனிமா எடுத்துக் கொண்டால் குணம் கிடைப்பது விரைவாக இருக்கும். உடலின் நீர்த் தேவை குறைதல்: கழிவு நீக்க வெளியிலிருந்து நீர் செலவு செய்யப் படுவதாலும், பெருங்குடல் குளிர்விக்கப் படுவதாலும் உடலின் நீர்த்தேவை கனிசமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், சிறுநீரகங்கள் வழியாக வெளியேற வேண்டிய நீரின் அளவு குறைந்து சிறுநீரக பாரம் குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைதல்: மலச்சிக்கலால் உடற்கழிவு நீக்கப்படாததாலும், உடலின் கழிவுத் தேக்கத்தால் கிருமிகளின் வளர்ப்பிடமாகி அதன் கழிவுகளும் உடன் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்வதாலும், குடல் இருக்கத்தால் ஏற்படும் உடல் உஷ்ணத்தால் கெட்டக் கொழுப்பு உற்பத்தியாவதாலும் உடல் எடை அதிகமாகிறது. தினமும் எனிமா எடுப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கிறது. காய்ச்சல் மற்றும் சளி குறைதல்: காய்ச்சல் மற்றும் சளி அதிகமாக இருக்கும் போது எனிமா எடுத்தால் அவையாவும் விரைவாக விடுபட வாய்ப்பேற்படுகிறது. ஜுரம் வந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கும் நிலமையானது ஒரு நாளில் சரியாக சாத்தியமாகிறது. நாட்பட்ட நோய்கள் விரைவாக குணமாதல்: எனிமா எடுப்பதால் நோய் வளர்வதற்கான உடல் உஷ்ணமும் உடற்கழிவும் நீக்கப்படுவதால், நாட்பட்ட நோய்கள் குணமாக உதவியாக இருக்கும். மூல நோய் குணமாதல்: நாட்பட்ட மலச்சிக்கலே ஆசனவாய் வெந்து, நொந்து போவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனிமா எடுப்பதால் மூல நோய் வராமல் பார்த்துக் கொள்ளவும், வந்த மூல நோய் விரை விரைவாக குணமாகவும் வழி கிடைக்கிறது. எனிமா எப்பொழுதெல்லாம் எடுக்க வேண்டும்? எனிமாவை தினமும் கூட எடுக்கலாம். நாம் காலை எழுந்தவுடன் காலைக் கடனை முடித்த உடன் நம் மலக்குடலை முழுமையாக சுத்தமாக்க எனிமா எடுக்கலாம். அதே போல் மலச்சிக்கல் காரணமாகக் காலைக் கடனை கழிக்க முடியாது போனாலும் எனிமா எடுக்கலாம். அதிகாலையில் பிரயாணம் மேற்கொள்வதற்கு முன்னரும், நீண்ட பிரயாணம் மேற்கொண்ட பின்பும் எனிமா எடுப்பது நல்லது. உடல் கலைப்புற்று சோர்வடையும் போது எனிமா எடுத்துவிட்டு ஓய்வெடுத்தால் விரைவாக புத்துணர்வு கிடைக்கும். முடிவாக எனிமா எடுப்பதோடு சத்துணவும் எடுத்தால் உடல் பலம் குறையாமல் எடை குறைவது சாத்தியப்படும். இயற்கையான இந்த முறையில் எனிமா எடுப்பதால் எவ்வித பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனிமா என்பது மலக்குடலைச் சுத்தப்படுத்தும் பின்விளைவற்ற நுட்பமாகும். இதனால் இனிய தன்மையும், புத்துணர்வும் உடல் ஆற்றலும் கிடைக்கும். ஆதாரம்: தன்னம்பிக்கை மாத இதழ்