தாய்நலமும் ஊட்டச்சத்தும்

பேறுகாலத்தில் ஏறத்தாழ 9-11 கி.கி. எடை கூடும்.

தாயின் நலத்தைப் பேணவும், வளரும் கருவின் தேவைகளை நிறைவு செய்யவும், குழந்தைப் பிறப்பின் போது தேவைப்படும் வலிமையையும் உள்ளுரத்தையும் வழங்கவும்,

போதுமான அளவுக்குப் பால்சுரக்கவும் கர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

தாய்க்கு இரத்தச்சோகை நோய் இருந்தாலும் கரு தனக்குத் தேவையான இரும்புச்சத்தைத் தாயிடம் இருந்தே எடுத்துக்கொள்கிறது.

அதனால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி, ஈரல், முட்டை, பச்சைப்பட்டாணி, பருப்புகள், கீரைகள், பேரீச்சை ஆகியவற்றை உட்கொள்ள தாயை ஊக்கப்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் அடையத் தக்கதாகவும், புரதம், தாது, உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

குறைந்த அளவு ஒரு லிட்டர் பால், ஒரு முட்டை, நிறைய பச்சைக் காய்கறிகள் பழங்களைக் முக்கிய உணவோடு கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆதாரம்: தேசிய சுகாதார இணையம்