தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாயின் அடர்த்தியான, முதல் பால் (சீம்பால்) குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இது இன்றியமையாததாகும். தாயின் முதல் பால் மிகச்சிறந்தது எனவே அதை தூக்கி எறியாமல் குழந்தைக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். குழந்தையின் செரிமான அமைப்பினை பின்வரும் நாட்களில் பெற இருக்கும் பண்பட்ட பாலை ஜீரணிக்க தயார்செய்ய சீம்பால் மிக முக்கியமானது. சீம்பாலில் துத்தநாகம், கேல்ஷியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் வேறு எதையும் கொடுக்கக்கூடாது. ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே புகட்டுவதால் சிறுவயதில் பொதுவாக ஏற்படும் நோய்களான வயிற்றுப்போக்கு அல்லது நிமோனியா போன்றவற்றால் ஏற்படும் சிசு மரணம் தடுக்கப்படுவதுடன் உடல் நலமில்லாத காலத்தில் விரைவாக குணமடையவும் அது உதவுகிறது. ஏழாம் மாதம் முதல், சிசுவின் ஊட்டச்சத்து தேவைக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. தாய்ப்பாலுடன் சரிவிகிதமாக ஊட்டசத்து நிறைந்த பல உணவுகளை அளிக்க வேண்டும். சரியான நேரத்தில், போதுமான, அடிக்கடி மற்றும் தகுந்த இணை உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு ஒரு நாளில் 3-4 வேளைகள் உணவளிக்க வேண்டும். தொடர்ந்து தாய்ப்பாலையும் அளிக்க மறக்க வேண்டாம். நோக்கம் தாய்ப்பால் அளித்தல் மற்றும் ஆறு மாதங்களுக்கு பிறகு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆதாரம்: யூனிசெஃப் மற்றும் பல வளர்ச்சி பங்குதாரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு