ஆரோக்கியமான சத்துணவு

சத்துணவின்மைக்கு எதிராக அதன் சகல வடிவங்களில் இருந்தும், எதிர்காலத்தில் பரவா நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவுவதே ஆரோக்கியமான உணவாகும்.

ஆரோக்கியமான உணவு என்ற கருத்தாக்கத்தை பின்வருவன வடிவமைக்கின்றன

உள்ளெடுக்கும் எரிசக்தி (கலோரிகள்) எரிசக்தி செலவுக்கு இணையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமற்ற எடை கூடுதலைத் தவிர்க்க மொத்த கொழுப்பின் அளவு மொத்த உள்ளெடுக்கும் எரிசக்தியின் அளவில் 30 % விட கூடக் கூடாது.

நிறைவுறா கொழுப்பு (unsaturated fats-மீன்

வெண்ணெய்ப்பழம், கொட்டைகள்

சூரியகாந்தி,கனோலா

ஒலிவ எண்ணெய்) நிறைவுற்றகொழுப்பை விட (கொழுப்புள்ள இறைச்சி

வெண்ணெய்

பாமாயில் அல்லது தேங்காய் எண்ணெய்

பாலேடு

பாலாடைக்கட்டி

நெய்,

பன்றிக்கொழுப்பு

தனி சர்க்கரையை (சர்க்கரையால் இனிப்பூட்டப்பட்ட பானங்கள், பண்டங்கள், மிட்டாய்கள்) மொத்த எரிசக்தி அளவில் 10 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

உப்பை ஒருநாளுக்கு 5 கிராமிற்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்; இதய நோய்கள், மாரடைப்பு ஆகியவற்றைக் குறைக்கலாம். அயோடின் உப்பைச் சேர்த்துக் கொண்டால் அயோடின் குறைபாட்டை குறைக்கலாம். உப்புள்ள கார வகைகளையும் கட்டுப்படுத்துக.

பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகள், முழு தானியங்கள் (உ-ம். பதப்படுத்தாத மக்காச்சோளம், சிறுதானியங்கள், ஓட்ஸ், கோதுமை, சிவப்பரிசி) போன்றவை உயிர்சத்துக்களையும் தாதுக்களையும் தருகின்றன.

ஒவ்வொரு நாளும் உணவில் குறைந்தபட்சம் 400 கிராம் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை பச்சையாகவும் புதியதாகவும் இருந்தால் நல்லது.

மாறுபக்கக் கொழுப்பை (trans fat - பதப்படுத்தப்பட்ட உணவு, துரித உணவு, தின்பண்டங்கள், பொரித்த உணவு, உறை பிசா, பை, குக்கி, ஸ்ப்ரெட் ஆகியவற்றில் காணப்படுவது) தவிர்க்க வேண்டும்.

கேள்வி பதில்கள்

அயோடின் என்பது என்ன? அது ஏன் அவ்வளவு முக்கியமானது?

அயோடின் இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலகம். அது ஒரு முக்கிய சத்து. மனித உடல் வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது.

அயோடின் குறைவால் முடி இழப்பு உண்டாகுமா?

ஆம். அயோடின் சத்துக் குறைவால் முடி இழப்பு ஏற்படும்.

அயோடின் விலைகூடிய ஒன்றா?

இல்லை.

உப்பில் அயோடின் குறைவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அயோடின் இல்லாத உப்பு சந்தையில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஏதாவது பிரச்சினையை எதிர்கொண்டால் அருகில் உள்ள உப்பு மேற்பார்வை அதிகாரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

ஆதாரம்: தேசிய சுகாதார இணையதளம்