அறிமுகம்

குளிர் அளித்தல் என்பது உடலின் மேற்பரப்பில் ஈரம் அல்லது உலர் தன்மையில் தோலை விட குளிர்ந்த நிலையில் உள்ள பொருட்களை அளிப்பதாகும். வலி மற்றும் உடல் வெப்பநிலையை குறைப்பதற்கும், குறிப்பிட்ட பகுதியை உணர்ச்சியடையச் செய்வதற்கும், இரத்த ஒழுக்கை கட்டுப்படுத்துவதற்கும், பாக்டீரியாக்களின் வளர்ச்சியை குறைத்து திசுக்கள் சிதைவதை தடுக்கிறது மற்றும் வீக்கத்தை தடுத்து அழற்சியை தடுக்கிறது.

குளிர்ச்சி அளித்தலின் வகைகள்

குறிப்பிட்ட பகுதி:

உலர் குளிர்ச்சி

*பனிக்கட்டி பை

*பனிக்கட்டி காலர்

*குளிர் போர்வை

*குளிர் தொட்டில்

*வேதியல் குளிர்பற்று

ஈர குளிர்ச்சி

*பனிக்கட்டி நீர்

*குளிர் நெருக்கி

*ஆவியாகும் லோசன்

பொதுவாக:

உலர் குளிர்ச்சி

வெப்பநிலை மிகவும் குறைதல்

ஈர குளிர்ச்சி

குளிர் துடைப்பு

குளிர் குளியல்

குளிர் சுருட்டல்

நோக்கங்கள்

• வலியையும் உடல் வெப்பநிலையையும் குறைப்பதற்கு

* குறிப்பிட்ட பகுதியை உணர்ச்சியறச் செய்வதற்கு

* இரத்த ஒழுக்கை கட்டுப்படுத்த

* பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த

* திசுக்கள் அழுகிப் போவதை தடுக்க

* வீக்கத்தை தடுக்க

* அழற்சியை குறைக்க

குளிர்ச்சி தேவைப்படுபவர்கள்

* காய்ச்சல்

* இரத்த ஒழுக்கு

* அழற்சி

குளிர்ச்சி தேவைப்படாதவர்கள்

* வெப்பம் மிகவும் குறைதல்

* அறுவை சிகிச்சை

* மிகவும் மோசமான உடல்நிலை

குறிப்பிட்ட பகுதிகளில் குளிர்ச்சி அளித்தல்

பனிக்கட்டி பை:

பனிக்கட்டி பை என்பது உலர்முறையில் குளிர்ச்சி அளித்தலாகும். பையில் உடைக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகளை போட்டு சாதாரண உப்பை தூவவேண்டும். உப்பு பனிக்கட்டியின் உருகுநிலையை குறைந்து பனிக்கட்டி உருகுவதை தடுக்கிறது.

உடைக்கப்பட்ட பனிக்கட்டியானது பனிக்கட்டிகளை விட சிறந்தது. உடைக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள் எளிதாக உடல் பகுதிக்கு ஏற்றவகையில் பனிக்கட்டி தொப்பியை பயன்படுத்தலாம். காற்று வெற்றிடங்கள் உடைக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இருக்காது. இதனால் குளிர்ச்சி தன்மை நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

• பனிக்கட்டி பை அல்லது காலர்

• உடைத்து நொறுக்கப்பட்ட பனிக்கட்டி அல்லது பனிக்கட்டி துண்டுகள்

* பிளானல் உறை

* சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு)

செய்முறை

• நோயாளிக்கு செய்முறையை விளக்கவும்.

* பனிக்கட்டிபையில் தண்ணீரை ஊற்றி இறுக்கமாக மூடிவிட்டு, ஏதாவது கசிவு இருக்கிறதா என்பதை கவனிக்க, பையை தலைகீழாக கவிழ்த்து பார்க்கவும்.

• பையில் அரை அல்லது மூன்றில் இரண்டு பங்கு உடைக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகளை போட்டு நிரப்பவும்.

* சோடியம் குளோரைடை (சாதாரண உப்பு) தூவிவிடவும்.

• பையை ஒரு சமதளபரப்பில் வைத்து, பிழிவதின் மூலம் உள்ளிருக்கும் காற்றை வெளியேற்றவும். காற்று வெப்பகடத்தலை பாதிக்கக்கூடியது.

* மூடியை திருகி இறுக்கமாக மூடவும்.

* பையின் வெளிப்பகுதியை துடைத்துவிட்டு உறையை போடவும்.

* பையை பொருத்தமான இடத்தில் வைக்கவும்.

* குளிர்ச்சி அளிக்கப்பட்ட பகுதியை குளியல் துவாலையால் துடைக்கவும்.

* நோயாளியை வசதியாக வை.

• பொருட்களை சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் வை.

* பயன்படுத்திய பொருட்களை வெளியேற்று.

* கைகளை கழுவிக்கொள்.

* பனிக்கட்டி பை அளிக்கப்பட்ட தேதி, நேரம், பகுதி மற்றும் கால அளவை பதிவேட்டில் குறிப்பிடலாம்.

குளிர்ப்பற்று (Cold packs)

தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப் பட்ட பனிக்கட்டிகள் கிடைக்கும். இந்த பைக்குள் வேதியல் மற்றும் நச்சுத்தன்மையற்ற பொருட்களால் மூடப் பட்டிருக்கும். வகைகளைப் பொறுத்து உறைநிலையில் வைக்கப்பட்ட உறைநிலைப்பைகள் அல்லது வேதிப் பொருட்கள் பிழிவதனால் குளிர்ச்சி உண்டாக்கக் கூடியது. இந்தப் பற்றுகளின் காகிதத்தன்மை உறைநிலையில் உள்ள திரவங்கள் உடல் உறுப்புகளின் மேல் எளிதாக வளைந்து பரப்பப்படக் கூடியது.

தேவையான பொருட்கள்

• பெரிய பேசினில் பனிகட்டி துண்டுகள்

• சிறிய பேசினில் குளிர்ந்த நீர்

• சல்லாத்துணி அல்லது சிறிய துவாலைகள்

• தண்ணீர் புகாத திண்டுகள்

* குளியல் துவாலை

செய்முறை

நோயாளிக்கு செய்முறையை விளக்கவும்.

* கைகளைக் கழுவு.

* சிறிய பேசினில் உள்ள குளிர்ந்த நீரை பெரிய பேசினில் உள்ள பனிக்கட்டியுடன் கலக்க வேண்டும்.

• சல்லாத்துணி அல்லது நெருக்கியை குளிர்நீரில் போடவேண்டும்.

* தண்ணீர் புகாத பொருளை குறிப்பிட்ட பகுதியின் கீழ்போடு.

• 5 நிமிடத்திற்கு ஒரு முறை குளிர்ச்சி அளிக்கப்பட்ட பரப்பை கவனி.

* குளிர் நெருக்கியை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது சூடானவுடன் மாற்று.

* பையை பிளானல் உறையினுள்போடு. பையின் வெளிப்புறத்தில் உள்ள ஈரத்தன்மையை பிளானல் உறை உறிஞ்சிவிடும்.

• ஆணையிடப்பட்ட பகுதியில் இதை செய். தோலை விட பனிக்கட்டி தொப்பியின் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால், உடல் வெப்பநிலை குறைக்கப்படும்.

* 30 நிமிடங்களுக்கு பனிக்கட்டி பையை வைத்து விட்டு பிறகு 1 மணி நேரத்திற்கு இடைவெளி கொடு.

* நோயாளி வசதியாக இருக்கிறாரா என்பதை கவனி.

* பனிக்கட்டி துண்டுகளை வெளியே கொட்டிவிட்டு எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் வை.

• கைகளை சுத்தம் செய்.

* பனிக்கட்டி பை அளித்த நேரம், பகுதி, நோயாளியின் முன்னேற்றம் மற்றும் தோல் பகுதியை கூர்ந்து கவனித்து பதிவேட்டில் பதிவுசெய்.

குளிர்பட்டை

இது கழுத்துப்பகுதியில் செலுத்தப்படும். பனிக்கட்டி பை கடைகளில் கிடைக்கும். இதை திரும்பவும் உறையச்செய்து திரும்பவும் பயன்படுத்தலாம். இவைகளில் சிறப்பு கரைசல்கள் நிரப்பப்பட்டு உறை நிலையில் வைத்து பயன்படுத்தும் வரை வைக்க வேண்டும். பிளானல் உறைகுளிர்பட்டை அல்லது பனிக்கட்டி பைக்கு தேவைப்படும்.

குளிர் நெருக்கி

இது குறிப்பிட்ட பகுதியில் ஈரத்தன்மையில் குளிர்ச்சி அளித்தலாகும். இது தொற்று நீக்கம் செய்யப்பட்டது அல்லது தொற்று நீக்கம் செய்யப்படாததாகவும் இருக்கும். திறந்த காயங்கள் அல்லது சிதைந்த தோல்ப்பகுதியில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட குளிர் நெருக்கி பொருத்தப்படும்.

மடிக்கப்பட்ட சல்லாத்துணி, சிறிய துண்டுதுணிகள் அல்லது மென்மையான துணிகள் போன்றவற்றை குளிர்ந்த நீரில் போட்டு பிழிவதால் குளிர் நெருக்கி செய்யப்படும் அல்லது சில ஆவியாகும் கரைசல் (ஒரு பங்கு ஸ்பிரிட்டில் 3 பங்கு நீர் கலக்குதல்) தேவையான பகுதிகளில் பொருத்தலாம். இதை மூடாமல் விட்டுவிடலாம். குளிர் நெருக்கியை 20 நிமிடங்களுக்கு மேல் அந்த இடத்தில் விட்டு வைக்கக்கூடாது.

தோலின் அருகில் உணர்ச்சியற்று போதல் அல்லது வலி போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனி.

துணி, துவாலை மற்றும் பழைய துண்டுத்துணி போன்றவற்றை உடல்பகுதிகளுக்கு ஏற்ற வகையில் பொருத்திவிட்டு திரும்ப துவைத்து பயன்படுத்தலாம்.

ஒரு பேசினில் குளிர் தண்ணீரை தயாரித்து அதில் குளிர்ச்சியாகும்வரை பற்றுகளை மூழ்கவை. அதிகப்படியான தண்ணீரை பிழிந்துவிட்டு, பிறகு உடல் பகுதிகளில் பொருத்தலாம். குளிர்ச்சியை நிலைநிறுத்த பற்றுகளை மீண்டும் மாற்றவேண்டும்.

வேதியல் குளிர்பற்றுகள்

இது வேதியியல் வெந்நீர் பற்று போன்றது.

பொதுவாக குளிர்ச்சி அளித்தல்

வெப்பநிலை மிகவும் குறைதல்

அதிகமாக காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு வெப்பத்தை குறைப்பதற்காக குளிர்துடைப்பு பயன்படும். உடலின் பெரும் பகுதிகள் ஒரே நேரத்தில் துடைக்கப்பட்டு வெப்பம் உடலின் மேல் உள்ள கரைசலுக்கு மாற்றப்படும். அடிக்கடி ஈரத்துவாலைகள் கழுத்து, அக்குள், தொடைப்பகுதி மற்றும் கணுக்கால் போன்ற தோல் பகுதிக்கு அருகில் இரத்த ஓட்டம் உள்ள பகுதிகளில் பொருத்தப்படும்.

ஒவ்வொரு பகுதியையும் உலர்த்துவதற்காக தேய்ப்பதற்கு பதிலாக துடைக்க வேண்டும். ஏனென்றால் தேய்த்தல் செல் மெட்டபாலிசத்தை அதிகரித்து வெப்பத்தை உண்டுபண்ணும். உயிராதாரப் புள்ளிகளை அடிக்கடி கவனிப்பதால், சிக்கல்களின் அறிகுறிகளை முன்னமே அறியலாம்.

குளிர் குளியல் நோயாளிக்கு இடர்பாடுள்ளது. விரைவில் அதிக வெப்பநிலை மிகவும் குறைந்த நிலைக்கு மாற்றப்படும்.

குழாய் நீர் துடைப்பு (Tepid sponging)

அதிக காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு குழாய் நீர் துடைப்பு மிகவும் நம்பகமான முறை மருத்துவரின் ஆணைப்படி பின்பற்றவேண்டும். நீரின் வெப்பநிலை 85-100Fக்குள் இருக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்