பெருகி வரும் மெட்ராஸ் ஐ : தடுக்க வழிகள்

கைகளால் கண்களை தேய்க்காதீர்கள் இதனால் கைகளில் இருக்கும் கிருமிகள் எரிச்சலை உண்டாக்கும்.

லென்ஸ் உபயோகிப்பவர்கள் அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளவும்.

கணினியை தொடர்ந்து பார்பவர்கள் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். முடிந்த வரை தூரத்தில் பார்ப்பது நல்லது.

அவ்வப்போது கண்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கண் சொட்டு மருந்தை அடிக்கடி உபயோக படுத்துவதை தவிர்க்கவும்.

கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும்.

கண்நோய் வராமல் தடுக்க கண்ணாடிகளை பயன்படுத்தவும்.

கண்நோய் வந்தவர்கள் கண்களின் மேல் தேனை தடவினால் எரிச்சல் குறையும்.

கண்நோய் வந்தவர்களின் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குள் இருப்பது நல்லது.

ஆதாரம் : விகடன்