அறிமுகம்

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கம் (BEB) என்பது இமைச்சுருக்கத் தசை மற்றும் மேல் முகத் தசைகளின் நோய்க்காரணம் அறியாததும் அதிகரித்துவருவதுமான ஒரு கோளாறாகும். இதனால் இமைகள் அடைபடுகின்றன. இது ஒரு இருபக்கக் கோளாறு. இதில் அனிச்சையாகத் தொடர்ந்து தசைச் சுருக்கம் உண்டாகிறது. விரிதசைகளின் (இமைச்சுருக்கத் தசை, மூக்குக்கூம்புத் தசை, மடிப்பு மேற்பிசிர்த் தசை) தொடர் சுருக்கமே இதன் இயல்பு. வேறு எந்த நோயும் இதனுடன் தொடர்புடையவை அல்ல. கடுமையான இமைச்சுருக்கத்தால் நோயாளி தற்காலிகமாகத் தன் பார்வையை இழக்கலாம். வாசிப்பு, பிரகாசமான ஒளி, வாகனம் ஓட்டுதல் அல்லது மனவழுத்தத்தால் இந்நோய் உருக்கொள்ளலாம். பேசுதல், ஓய்வு அல்லது நடையின் மூலம் சரியாகலாம்.

பின் வருவது போல சில குறிப்பிட்ட நிலைகளின் ஒரு பகுதியாகக் காணப்படும் (இரண்டாம் கட்ட இமைச்சுருக்கம்) இமைச்சுருக்கத்தில் இருந்து தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கத்தை வேறுபடுத்திக் காண வேண்டும்:

மெய்கே நோய்த்தாக்கம்: கீழ் முக மற்றும் கழுத்து தசைகளினால் ஏற்படும் இமைச்சுருக்கம்.

புருகெல் நோய்த்தாக்கம்: இந்நோய் இமைச்சுருக்கத்தோடு தொடர்புடையது. கடுமையான அடிமுதுகுத்தண்டுவடம் மற்றும் உட்கழுத்து தசைகளினால் ஏற்படுவது.

புறக்கூம்பகக் கோளாறுகள்: புறக்கூம்பகக் கோளாறுகளான மண்டலம் சார் நோய்களில் இமைச்சுருக்கம் காணப்படும்.

எதிர்வினை இமைச்சுருக்கம்: கண் பரப்பு உறுத்தலின் அடுத்த கட்டமாக ஏற்படுவது.

நோயறிகுறிகள்

நோய்கண்டறிதலுக்கு முன்னான அறிகுறிகள் வருமாறு:

கண்களில் நீர் வடிதல்

ஒளிக்கூச்சம்

தெளிவற்ற கண்வலி

இமைச்சுருக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள்:

இமைத்தல் விகிதம் அதிகரிப்பு

இமைச்சுருக்கங்கள்

கண் உறுத்தல்

நடு அல்லது கீழ் முகச் சுருக்கம்

புருவச் சுருக்கம்

கண்ணிமை நடுக்கம்

காரணங்கள்

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கத்தின் சரியான காரணம் தெரியவில்லை.

செயல்சார் நரம்பியல் பிம்ப ஆய்வுகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சோதனைகளில் அடித்தள நரம்பு செல் தொகுதிகளின் செயலிழப்பு குறித்த சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சில நேர்வுகளில் அபூர்வமாக மரபியலும் பங்கு வகிக்கிறது. சில நோயாளிகளின், குறைந்தபட்சம் ஒரு முதல்நிலை உறவினருக்கு ஒருவகையான குவிதசையிறுக்கம் காணப்படுகிறது. இது ஒரு மரபுவழி தன்னினக்கீற்று மேலாதிக்க நிலையாக இருக்கலாம்.

ஆபத்துக் காரணிகள்:

இமைச்சுருக்கத்துக்குக் கீழ்க்காண்பது போல மாறுபடும் ஆபத்துக்காரணிகள் உள்ளன:

தலை அல்லது முகக்காயம்

கரும்படல இழையழற்சி, உட்கண் அழற்சி, கடுமையான உலர்கண், இமையழற்சி, ஒளிக்கூச்சம் ஆகியவற்றால் அனிச்சை இமைச்சுருக்கம் தூண்டப்படலாம்.

மன அழுத்தம்

குடும்ப உறுப்பினர்களிடம் தசையிறுக்கம் அல்லது நடுக்கம் காணப்படுதல்.

கீழ்க்காணும் மருந்துகளாலும் இமைச்சுருக்கம் ஏற்படலாம்:

பென்சோடயாசெப்பைன்கள்: நீடித்தப் பயன்பாடு அல்லது திடீரென நிறுத்துவது.

டோப்போமினர்ஜிக் மருந்துகள்: உ-ம். பார்க்கின்சன் நோயாளிகள்.

ஆன்டிஹிஸ்ட்டோமின்கள்: உ-ம்.மூக்குச் சொட்டுகள்.

சிம்பதோமிமெட்டிக் மருந்துகள்.

இருபாதிப்பு நிலைகள்:

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கத்தோடு சேர்ந்து காணப்படும் நிலைகள்:

உலர் கண்கள்

கரு-வெண் விழிப்படல அழற்சி

பிற நரம்பியல் கோளாறுகள்:

பார்க்கின்சன் நோய்

பார்க்கின்சன் பிளஸ் நோய்த்தாக்கங்கள் உ-ம். மூளை வாதம் மற்றும் புறணி அடிசெல் தொகுதி சிதைவு.

ஹண்டிங்டன் நோய்

பெருமூளை இருபக்கவாதம்

இயல்பான இமைத்தலில், இரு தொகுதி தசைகளின் செயல்பாட்டாலும் இணைத் தடையாலும் இமை மூடுகிறது. இமையின் விரிதசைகளும் அனிச்சையாகச் சுருங்கும் தசைகளுமே (உ-ம். மேலிமை உயர்த்துந்தசை, நெற்றித்தசை) இத்தசைகள். இயல்பான இமைத்தலில் விரி மற்றும் சுருங்கு தசைகள் வெவ்வேறு நேரங்களில் செயலாற்றுகின்றன. இதனால் விரி தசைகள் இயங்கும்போது சுருங்கு தசைகள் தடைபடுகின்றன. இமைச்சுருக்கத்தில் விரி மற்றும் சுருங்கு தசைகளுக்கு இடையில் இருக்கும் இத் தடை இல்லாமல் போகிறது.

நோய் கண்டறிதல்

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கத்தின் கண்டறிதல் மருத்துவ ரீதியாகச் செய்யப்படுகிறது (வரலாறு மற்றும் உடல் பரிசோதனை). மேலும் தொடர்புடைய நிலைகள் இல்லை என்பதைக் கண்டறிந்து விலக்குவதன் மூலமாகவும் நோய் கண்டறியப்படுகிறது.

மருத்துவ அம்சங்கள்:

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கம்:

தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கம் ஏற்பட்ட பின், காற்று, சூரிய ஒளி, ஒலி, காற்று மாசு, வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், மனவழுத்தம், கண் அல்லது தலை அசைவு ஆகியவற்றால் தூண்டப்பட்டு இமைத்தல் அதிகரிக்கும். நடுக்கம் மற்றும் முகநரம்பின் கிளைநரம்புகளின் அசைவு போன்ற அறிகுறிகளில் இருந்து விடுபட நோயாளிகள் உணர்வுத் தந்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம் உ-ம். விசிலடித்தல், இருமுதல், உண்ணுதல், பல்குத்துதல், கொட்டாவிவிடுதல் அல்லது சவைக்கும் பசை.

ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு இமை சுருக்கத்தின் ஓர் அம்சமான இமை விறைப்பு உண்டாக சில மாதங்களில் இருந்து பல ஆண்டுகள் வரை ஆகும். இமைச்சுருக்கம் ஆரம்பத்தில் ஒருபக்கமாகத் தொடங்கி இறுதியில் இருபக்கங்களையும் பாதிக்கும். சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரம் வரை இமைச்சுருக்கம் நீடிக்கும். இடைவிட்டு அல்லது தொடர்ந்து என இந்நோய் மாறுபட்டப் போக்கைக் கொண்டது. பெரும்பாலான நோயாளிகளில் இந்நோய் மெதுவாக அதிகரித்து வரும்.

மிகை இமைத்தலால், ஒரு பக்க இலேசான இழுப்பு ஏற்பட்டுப், பின் அடிக்கடி நேரும் இருபுற விசையுடன் கூடிய வலிப்பாக அதிகரித்து வரும். நிலைமை கடுமையாக இருக்கும் போது நோயாளியால் கண்களைத் திறக்க முடியாமல் போவதோடு அதிக வலியும் செயல்பட முடியாதவாறு பார்வை இழப்பும் தினசரி வேலைகளில் இடையூறும் உண்டாகும். கடுமையான இமைச்சுருக்கத்தால் அதிக அளவு துன்பமும், உளவியல் பலவீனமும் ஏற்பட்டு மனக்கலக்கம், மனச்சோர்வு, சமூகத் தொடர்புகளைப் புறக்கணித்தல், பணிநேரப் பிரச்சினைகள் ஆகியவை உண்டாகும். ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனம் செலுத்தும் போதும் உறங்கும் போதும் இமைச்சுருக்கம் குறையும்.

இமைச்சுருக்கத்தோடு இமையைத் திறக்க முடியாமலும் போகலாம். இது மேலிமை உயர்த்துந்தசை செயல்பாட்டில் உண்டாகும் தடையால் நேருகிறது. பார்க்கின்சன் நோய் குறைபாடு கொண்டவர்களிடம் இது பரவலாகக் காணப்படும்.

இரண்டாம்நிலை இமைச்சுருக்கம்:

மெய்கே நோய்த்தாக்கம்: இதனுடன் இணைந்து முகச்சுளிப்பும் விறைப்பும் காணப்படும்.

புருகெல் நோய்த்தாக்கம்: இது முப்பெரும் இயக்கு நரம்பு விறைப்பாகும். இதனால் வாய் அகலத் திறந்திருக்கும். மூச்சு ஆழமாக இருக்கும். விழியின் மேல்கீழ் நடுக்கம் இருக்கும்.

புற முக்கூம்புக் கோளாறுகள்: இக் கோளாறு உடையவர்களுக்கு முகத்தசைகள் தானே இழுத்துக்கொள்ளல், கழுத்து மற்றும் அவயவங்களில் பற்சக்கர விறைப்பு போன்ற அசாதாரண அசைவுகள் காணப்படலாம்.

எதிர்வினை இமைச்சுருக்கம்: இது உலர் கண்கள் அல்லது ஒளி உறுத்தலால் ஏற்படலாம்.

இமைச்சுருக்கத்தை தளர்த்தும் நிலைகள்:

இவற்றில் அடங்குவன:

உறக்கம்

ஓய்வு

தாழ் பார்வை

செயற்கைக் கண்ணீர்

இமை இழுவை

பேச்சு

பாடுதல்

வாய்க்குள்ளாகப் பாடுதல்

குறுக்கெழுத்தை விடுவித்தல்

கணக்கு செய்தல்

புதிர் விடுவித்தல்

நீடித்த இமைச்சுருக்கத்தில் இணைந்துள்ள உடற்கூற்று மாற்றங்கள்:

இமையிறக்கம்: மேலிமை இயக்கம் மேலிமை உயர்த்தும் தசைநார் பிணைப்பு தேய்வதனாலும் உள்நுழையாமல் விடுபடுதலாலும் உண்டாகிறது.

புருவயிறக்கம்: நீடித்த விறைப்பால் திசுப்படலம் நீட்சி அடைந்து முகத்தின் தாங்கமைப்புகள் பலவீனப்படுதலால் இமையிறக்கம் ஏற்படுகிறது.

மேலிமைத்தோல் மிகைப்பு: இமைசுருக்கத்தால் தோல் இழுக்கப்பட்டு இமையில் மிகையாகத் தோல் அமைதல்.

தோலுரிதல்: இமையைக் கரங்களைக் கொண்டு திறக்க நோயாளி முனைவதால் தோலுரிதல் உண்டாகிறது.

இமையுட்பிறட்சி: இமைச்சுருக்கத்தல் விறைப்பு இமையுட்பிறழ்ச்சி ஏற்படலாம்.

கண்மூலைத் தசைநார் கோளாறுகள்: நடு மற்றும் பக்க கண்மூலைத் தசைநார்கள் இழுபடுதலால் கிடைமட்ட இமைத்தொய்வு ஏற்படலாம். இதனால், கீழிமையின் உட்பிறட்சி அல்லது வெளித்துருத்தல் உண்டாகலாம். இழுபடுதலால் இமைக் கிழிவும் நேரலாம்.

இமைப்பிளவில் முன்தோல்குறுக்கம் (குட்டையானது மற்றும் ஒடுங்கியது): இமைச்சுருக்கத்தால் இமைப்பிளவில் முன்தோல்குறுக்கம் ஏற்படலாம்.

பின்வரும் நிலைகளில் இருந்து இமைச்சுருக்கத்தை வேறுபடுத்திக் காணவேண்டும்:

விழித்தசைத்துடிப்பு: தசை பலவீனமோ நலிவோ இல்லாமல் இமைமூடு தசையின் நுண் திசுப்படலம் தன்னிச்சையாகச் சுருங்குதல் இதன் இயல்பாகும். குறிப்பாக இது ஒரு பக்கமானதும், பொதுவாகக் கீழிமையைப் பாதிப்பதும் ஆகும்.

மூளையுறை உறுத்தலுக்கு இரண்டாம் நிலை.

முக நடுக்கம் அல்லது டூரெட் நோய்த்தாக்கம்: முக நடுக்கம் என்பது திரும்பத் திரும்ப நடைபெறும் ஒரேமாதிரியான அசைவுகள் அல்லது துரிதமாக இமைத்தல், மோப்பம் பிடித்தல், முக அசைவுகள், வயிற்று தசைகள் இறுகுதல் போன்ற வெளிப்பாடுகள் ஆகும்.

பாதிமுக விறைப்பு (முகத்தின் ஒரு பகுதி சுருங்குதல்): இது சுற்று இமை மூடு தசை மற்றும் சுற்றுவட்ட தசைகளின் புடைப்பாகத் தொடங்கும். பின்னர் முகநரம்பின் கிளைகள் அடங்கிய கீழ் முகத் தசையையும் பாதிக்கும். விறைப்பு, திடீர்தசைச் சுருக்கமாகவும், அனிச்சையானதாகவும், மனவழுத்தத்தால் கூடுவதாகவும் தூக்கத்தின் போதும் தொடர்வதாகவும் இருக்கும். பாதி முக விறைப்பு முக பலவீனமாக மாறும்.

குவி விறைப்புகள்.

நோய் மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.

தற்போது தீங்கற்றத் தானேதோன்றும் இமைச்சுருக்கத்திற்கு சிகிச்சை இல்லை. மருத்துவம் அளித்தாலும் இந்நோய் பெரும்பாலும் அதிகரிக்கும்.

பொதுவான நடவடிக்கைகள்:

கண்ணாடி: ஒளிக்கூச்சம் உள்ளவர்கள் வலியைக் குறைக்க புற ஊதாக்கதிரைத் தடுக்கும் நிறக்கண்ணாடிகளை அணியலாம்.

இமை சுத்தம்: இமைச்சுத்தம் உறுத்தலைக் குறைக்கும். இமைச்சுருக்கம் உள்ளவர்களுக்கும் நோய்குறையும்.

செயற்கைக் கண்ணீர்: உலர் விழிக்கு செயற்கைக் கண்ணீரும், கண்ணீர் நாள அடைப்பானும் பயன்படுத்தும் போது இமைச்சுருக்கத்திற்கு நிவாரணம் கிடைக்கலாம்.

மருத்துவ சிகிச்சை:

- போட்டுலினம் A நச்சு: தோலுக்கடியில் போட்டுலினம் A நச்சை மேல், கீழ் இமைகள் மற்றும் புருவத்துக்கு ஊடே ஊசிமூலம் செலுத்தும் போது சற்று நிவாரணம் கிடைக்கும். இது நரம்பு முனைகளில் இருந்து கடத்தியான அசெட்டைல்கோலின் விடுபடுவதைத் தடைசெய்து தசைகளை மரக்கச் செய்கிறது. காற்றிலா கிராம்-நேர்மறை பாக்டீரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்டுலினத்தில் இருந்து போட்டுலினம் A நச்சு எடுக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை:

போட்டுலினம் ஊசியினால் பலன் கிடைக்காதவர்களுக்கும், மருந்து ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை ஒதுக்கப்பட்டுள்ளது.

அறுவை கீழ்வருமாறு அமையலாம்:

தசைநீக்கம்: இமை விரிதசையை நீக்குதல்.

விரிவான தசை நீக்கம்: இமை விரிதசை, இமையிறக்கு தசை, மடிப்பு மேற்பிசிர்த் தசை ஆகிவற்றை நீக்குதல்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்