ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம்

கல்லீரல் பாதிப்புக்கு குடிப்பழக்கம், கல்லீரலில் கொழுப்புப் படிதல், ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் உள்ளிட்டவை காரணமாகின்றன.

இதில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே கல்லீரல் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள் தெரியவரும். ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி வைரஸ் ரத்தம், உடலுறவு ஆகியவற்றின் மூலமாகப் பரவுகிறது.

மேலும் இந்த வைரஸ்கள் கருவுற்ற தாய்க்கு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே குழந்தைப் பிறந்த பின்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க தடுப்பு மருந்து உள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துடன் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

எனவே அவர்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ் தாக்கம் உள்ளதா எனப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனைக்கு கட்டணம் குறைவு, அதோடு இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க எல்லா வயதினரும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம்.

மேலும் இந்த வைரஸ் ரத்தக் காயங்கள் மூலம் பரவும் என்பதால் ஒருவர் பயன்படுத்திய சீப்பு, பிளேடு, பல்துலக்கி உள்ளிட்டவற்றை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது.

கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள், அதிக கொழுப்பு உள்ளவர்கள், மாவுச் சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்களை உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம்: கல்லீரல் மருத்துவ நிபுணர், அரசு பொது மருத்துவனை சென்னை