அறிமுகம்

இது புற உள்நாக்கு சீழ்க்கட்டி எனவும் அழைக்கப்படும். உள்நாக்கிற்கும் அதை சுற்றியுள்ள பகுதிக்கும் இடையில் சீழ் கட்டுதலே இந்நோய். ஓர் உள்நாக்கிற்கும், தொண்டைச் சுவருக்கும் இடையில் சீழ்க்கட்டி உண்டாகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஓர் உள்நாக்கில் இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்குத் தொற்று பரவும்.

நோயறிகுறிகள்

தொண்டை வீக்கத்தின் அறிகுறிகளில் அடங்குவன:

தொண்டைவலி அதிகரித்தல் (பொதுவாக ஒரு பக்கம்)

100.4F மேல் காய்ச்சல்

வாய் திறப்பதில் சிரமம்

விழுங்கும்போது வலி

குரல் மாற்றம் அல்லது பேசுவதில் சிரமம்

வாய் நாற்றம்

பாதிக்கப்பட்ட பாகத்தில் காது வலி

தலைவலியும் சுகம் இல்லாதது போல் உணர்வும்

முகத்தையும் கழுத்தையும் சுற்றி வீக்கம்

காரணங்கள்

பொதுவாக, கடுமையான உள்நாக்கு அழற்சிக்குச் சிகிச்சை அளிக்காததும் அரைகுறையாக சிகிச்சை அளிப்பதுமே புறஉள்நாக்கு சீழ்க்கட்டிக்குக் காரணம். இதனால் தொற்று உள்நாக்கின் சுற்றுப் புறத்தில் பரவுகிறது. இப்பகுதியில் தளர்வான இணைப்புத் திசுக்கள் இருப்பதால் எளிதில் சீழ்க்கட்டி ஏற்படுகிறது.

நோய்கண்டறிதல்

மருத்துவர் அறிகுறிகளைக் கேட்டறிந்தும், தொண்டையும் உள்நாக்கையும் சோதித்தும் நோயைக் கண்டறிகிறார்.

நோய்மேலாண்மை

தொற்றைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்கப்படுகின்றன. பென்சிலினுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்குப் பொதுவாகக் கிளிண்டோமைசின் அளிக்கப்படுகிறது.

அழுத்தப்பட்ட திசுக்களினால் ஏற்படும் வலியைக் குறைக்க அறுவை மூலம் சீழ் அகற்றவும் படலாம்.

சிக்கல்கள்

காற்றுப்பாதையில் தடை

தாடை, கழுத்து, நெஞ்சில் புரையோடுதல்

இதய உள்ளுறை அழற்சி (அரிதாக)

நுரையீரலைச் சுற்றி பாய்மம்

இதயத்தை சுற்றி அழற்சி (இதயவுரை அழற்சி)

நிமோனியா

இரத்தத்தில் தொற்று

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்