பிரதானமாக சிறுநீரகங்கள், கழிவுப் பொருட்களை வடிகட்டி இரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து உடலுக்கு வெளியே தள்ளுகிறது. உபரியான திரவங்களையும் அது வெளியேற்றுகிறது. மின்கடத்தும் திரவங்களின் நிலையையும் சமநிலையாக்கி அமிலங்களின் அளவையும் சரியான நிலையில் வைக்கிறது. இந்த வேலையை அது சரிவரச் செய்ய முடியாத நிலைக்குத் தான் சிறுநீரகங்கள் செயலிழப்பது என்கிறோம்.

சிறுநீரகங்களின் செயலிழப்பை எப்படி கண்டுபிடிப்பது?

இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினைனின் அளவும், யூரியாவின் அளவும் சிறுநீரகத்தின் செயல் திறனை பிரதிபலிக்கின்றன. அவற்றின் அளவுகள் கூடினால் மற்றும் மேற்கண்ட இரசாயனப்பொருளின் அளவு 1.6 மி.கி/டெ. லி ஆக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு போதுமான திறன்மிக்கதாக இல்லை என்று அர்த்தம்.

ஒரு சிறுநீரகம் மட்டும் செயலிழந்த நிலையை முழு சிறுநீரக செயலிழப்பு என்று சொல்ல முடியுமா?

இல்லை. ஒன்றே ஒன்று மட்டும் செயலிழப்பது ஒட்டு மொத்தமாக சிறுநீரக செயல்பாட்டை பாதித்து விடாது. ஏனென்றால் மற்றது ஒன்று ஆரோக்கியத்துடன் இருப்பதால் இரண்டு சிறுநீரகங்களின் வேலையையும் அது ஒன்றே எடுத்துச் செய்கிறது.

சிறுநீரக செயலிழப்பின் இரு பெரும் வகைகள்

கடுமையான சிறுநீரக செயலிழப்பும், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பும் ஆகும். இதை ஆங்கிலத்தில் Acute kidney failure மற்றும் chronic kidney disease என்று சொல்லுவர்.

கடுமையான சிறுநீரக செயலிழப்பு

இதில் சிறுநீரகங்களின் செயல் மிகக் குறைந்த காலத்திற்கே இழக்கப்படுகிறது. இது பல்வேறு காரணங்களினாலும், உடலுக்கு ஏற்படும் பலவித தாக்கங்களினாலும் ஏற்படுகிறது. இவ்வகை செயலிழப்பு பெரும்பாலும் தாற்காலிகமானதாக இருக்கிறது. முறையான சிகிச்சையால், சிறுநீரகங்கள் வெகு சீக்கிரத்தில் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகின்றன.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு

பல மாதங்களுக்கு, தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத வகையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர். CRF என்று சொல்லுவர். குணப்படுத்த முடியாத இந்த நோயின் தாக்குதலால் சிறுநீரகத்தின் செயல்பாடு மெல்லமெல்லக் குறைந்துவரும். வெகுநாட்களுக்குப் பிறகு சிறுநீரகங்கள் முற்றிலுமாக செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்படும். இந்த மிக முற்றிய நிலையை, முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease (ESKD)) என்று சொல்லுவர்.

ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil