பல்வகை மருந்துகளால் சிறுநீரகங்களுக்குப் பிரச்னை வருவது இயல்பு. உடலின் பிற அங்கங்களை விட சிறுநீரகமே ஏன் மருந்துகளினால் வரும் விஷத்தன்மைக்கு இலக்காகிறது? மருந்தின் விஷத் தன்மையால் சிறுநீரகங்களுக்கு வரும் இரு பெரும் தீய விளைவுகள் என்னவென்றால் - 1. சிறுநீரகமே மருந்தை வெளியேற்றுதல் : சிறுநீரகங்களே உட்செல்லும் மருந்துகளை அகற்றும் வேலை செய்யும். அப்படி வெளியேற்றும்பொழுது, ஒரு சில மருந்துகள் அல்லது மருந்திலிருந்து வெளியேறும் பொருட்கள், சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும். 2. அதிக அளவு சிறுநீரகத்திற்கு இரத்தம் பாய்தல் : ஒவ்வொரு நிமிடமும் இருதயம் பம்ப் செய்யும் அளவில் 20 சதவீதம் (1200 மி.வி.) இரண்டு சிறுநீரகங்களையும் வந்தடைகிறது. இது சுத்திகரிப்புக்காக வந்தடைகிறது. அனேகமாக எல்லா அங்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிறுநீரகத்திற்கே மிக அதிக அளவு இரத்தத்தை பெறுகிறது. அது அந்த அங்கத்தின் எடைக்கு ஏற்ற விகிதத்தில் இரத்தத்தின் அளவைப் பெறுகிறது. மிக அதிக அளவில் பாயும் இரத்தத்தினால், தீய விளைவுகளைக் கொண்டு வரும் மருந்துகளும் சிறுநீரகங்களுக்குள் போய் விழுகின்றன. மிக அதிக அளவில் உள்ள விஷங்கள், மிகக் குறைந்த நேரத்தில் போய் விழுகின்றன. இதுவே சிறுநீரகத்தைப் பாழடிக்கிறது. சிறுநீரகங்களைப் பாழடிக்கும் பிரதான மருந்துகள் வலி நிவாரணிகள் உடல் வலிக்கும், தலை வலிக்கும், மூட்டுக்கள் வலிக்கும், காய்ச்சலுக்கும், (மருந்துக் கடைகளில் உடனடியாக வாங்கி உடனே உபயோகித்துக் கொள்ளப்படுபவை ) வாங்கப்படும் மருந்துகள் எந்தவித மருத்துவர் பரிந்துரையும் இல்லாமல் எளிதாக வாங்கப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைதான் மிகவும் மோசமாக சிறுநீரகங்களை பாதிக்கின்றன. NSAIDS என்றால் என்ன? எவ்வகை மருந்துகளை இந்தக் கூட்டத்தோடு சேர்க்கலாம்/ இந்தக் கூட்டத்தின் பெயருக்கு விளக்கம் Nonsteroidal Antilnflammatory Drugs (NSAIDS) என்பதாகும். பொதுவாகவே வலி, காய்ச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படும் மருந்துகள் இவை. Aspirin, diclofenac, ibuprofen, indomethacin, ketoprofen, nimesulide, naproxen போன்றவை இவ்வகையில் அடங்கும். இவை சிறுநீரகங்களுக்குக்கேடு விளைவிக்குமா? பொதுவாக சரியான அளவோடு எடுத்துக் கொள்ளப்பட்டால், இவை பாதுகாப்பானவையே. அதுவும் மருத்துவரின் பரிந்துரைகளோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவை aminoglycosides க்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தையே மருந்துகளினால் உருவாக்கப்படும் சிறுநீரக நோய்களுக்குக் காரணமாக வகிக்கின்றன. அவை எந்த சமயத்தில் இந்தக் கேடுகளைக் கொண்டு வரும்? அவற்றை நெடு நாட்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வந்தால் அதுவும் டாக்டரின் அனுமதியின்றி தொடர்ந்தால் - ஒரே ஒரு மாத்திரையில் பல மருந்துகளை உள்ளடக்கிய நிலைகள் உண்டு. உதாரணத்திற்கு Aspirin, phenacetin and carine போன்றவை பல மருந்துகளை உள்ளடக்கியவை. இவற்றை வயதானவர்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது நீரிழிவு நோயாளிகளோ அல்லது உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களோ எடுத்துக் கொள்கிறார்கள். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான இவ்வகை மருந்து எது? Paracetamol (acetaminophen) எனும் மருந்தே இவற்றை விட அதாவது இதர (NSAIDS)ஐ விடச் சிறந்தது. எத்தனையோ இருதய பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கப்படுகிறார்களே, அதனால் கேடு உண்டா? இருதய பாதிப்பு உள்ளவர்களுக்கு குறைவான அளவே பரிந்துரைக்கப்படுவதால், அது பாதுகாப்பாகவே இருக்கும். இப்படி உருவான அபாய விளைவுகளை குணப்படுத்தி சிறுநீரகங்களின் நிலையை சாதாரண நிலைமைக்கு கொண்டு வர முடியாதா? "ஆம்" அல்லது 'இல்லை" "ஆம்" குறுகிய கால அளவில் சிறுநீரகங்கள் பாதிக்கப் படும்பொழுது, அவற்றை மீண்டும் சகஜநிலைக்கு மருந்துகளை நிறுத்தினாலே கொண்டு வந்து விடலாம். 'இல்லை' எத்தனையோ வயதான நோயாளிகளுக்கு - மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு - இவ்வகை மருந்துகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அவற்றை நீண்டநாட்களுக்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்பொழுது, மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக சிறுநீரகங்கள் கெடும். இவ்வகை அபாயங்களை மீண்டும் மாற்றி சிறுநீரகங்களை சகஜநிலைக்குத்திரும்பச் செய்ய முடியாது. அவர்களைப் போன்றவர்கள் நிச்சயமாக டாக்டரின் அறிவுரைப்படியே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். மிக மெதுவாகவும் ஆனால் நிச்சயம் பழுதாகிக் கொண்டு வரும் சிறுநீரக நோய்களை எப்படிக் கண்டறிவது? சிறுநீரில் புரோட்டீன் கலந்து வந்ததைக் கண்டால் அதுவே முதலாவதும் ஒரே அடையாளமாக சிறுநீரகங்கள் பழுதாகி இருப்பதைக் காட்டும். சிறுநீரகங்களின் நிலை மேலும் மோசமாகும்பொழுது, இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினைனின் அளவு கூடும் வலிநிவாரணிகளால் ஏற்படும் அபாய விளைவுகளை எப்படி நிறுத்துவது? எளிதான வகைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் எளிதாக நோய் பற்றிக் கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட மருந்துகளை பரிந்துரைக்காமல் இருக்க வேண்டும். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை உபயோகித்தல் கூடாது. நெடு நாட்களுக்கு அந்த மருந்துகள் தேவை என்றால், நிச்சயமாக மருத்துவரின் பரிந்துரையிலேயே அவை எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். எடுத்துக்கொள்ளப்படும் அளவும் குறைக்கப்படல் வேண்டும் எடுத்துக் கொள்ளும் கால அளவும் குறைக்கப் படல் வேண்டும். வலிநிவாரணிகள் ஒருசிலவற்றைக் கலந்து சாப்பிடுவதையும் நிறுத்தவேண்டும். பருகும் நீரை தினமும் நிரம்பப் பருகுங்கள். போதுமான அளவு உடலில் நீர்ச்சத்து இருக்கட்டும். Aminoglycosides இவ்வகை மருந்துகள் ஒரு வகை ஆன்டிபயாடிக் தொகுப்பைச் சேர்ந்தவை. இவற்றை அடிக்கடி சிறுநீரக பாதிப்பை எதிர்த்துக் கொடுப்பார்கள். இந்த மருத்துவம் ஆரம்பித்து 7 லிருந்து 10 நாட்களுக்குள் இந்த சிறுநீரக பாதிப்பு ஆரம்பிக்கும். இந்த பிரச்னையை அந்த சமயத்தில் கண்டறிவது பெரும்பாலும் தவறி விடப்படுகிறது. ஏனென்றால் வெளிவரும் சிறுநீரின் அளவு குறைவது இல்லை. வயதானவர்களுக்கு இவ்வகை ஆன்டிபயாடிக் மருந்துகள் பாதிப்பைக் கொண்டு வரும் சாத்தியக் கூறுகள் மிக அதிகமே. நீரிழிவு நோய், நீர்ச்சத்து குறைந்தவர்கள், முன்பே சிறுநீரக நோய்கள் கொண்டிருப்பவர்கள், உடலில் பொட்டாசியம் மற்றும் மக்னீஷியத்தின் குறைவானநிலை இருப்பவர்கள், நெடுநாளைக்கு இந்த மருந்து சாப்பிட்டவர்கள், மருந்துகளை ஒரு கலவையாக எடுத்துக் கொண்டவர்கள், (அவை சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பைக் கொண்டு வரும்) கல்லீரல் நோய் இருப்பவர்கள், மற்றும் இருதயத்தில் அழுத்தத்தால் வரும் கேடுகளைத் தாங்கி வாழ்பவர்கள் - இவர்களை எல்லாம் அந்த மருந்துக் கூட்டம் தாக்கும். மேற்கண்ட சூழல்களில் சிறுநீரக பாதிப்பை எப்படி முறியடிப்பது? 'அமினோகிளைகோசைட் மருந்துகளை எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்வது. அபாய சாத்தியக் கூறுகளை முதலில் அகற்றுவது அவசியம். பகுத்து பகுத்து எடுத்துக் கொள்வதை விட ஒரு நாளைக்கு ஒரு முறையே மருந்தை எடுத்துக் கொள்வது எடுத்துக் கொள்ளும் அளவு மிகக் குறையாமலும், மிகவும் அதிகப்படாமலும் இருத்தல் வேண்டும் ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், அளவை மாற்றி எடுத்துக் கொள்வது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று தவறாமல் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பது Radiocontrast injections எக்ஸ்ரே கதிர்களோடு கலந்த நிறம் கொடுக்கும் ஊடகத்தின் உபயோகத்தால் பொதுவாக சிறுநீரகங்களை பழுது படுத்தும். இது ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும். இது முற்றிலும் சகஜ நிலைக்கே திருப்பி குணப்படுத்த முடியும். இது மருந்துகளாலேயே உருவாக்கப்பட்டது. மேலே சொல்லப்பட்ட இதர நோய்களான நீரிழிவு, நீர்ச்சத்து குறைதல், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, வயது முதிர்ச்சி, மருந்துக் கலவைகள் எல்லாமாகச் சேர்ந்தோ தனித்தோ பாதிப்பைக் கொண்டு வரும். இவற்றை எல்லாம் தவிர்க்க வித்தியாசமான வழிகள் இருக்கின்றன. இதர மருந்து வகைகள் ஒரு சில ஆன்டிபயாடிக் மருந்துகள், புற்று நோய்க்கு எதிராக கொடுக்கப்படும் மருந்துகள், காசநோய்க்கு எதிராகக் கொடுக்கப்படும் மருந்துகள் ஆகியவை எல்லாம் சிறுநீரகத்தைப் பாழ் படுத்தும். இதர மருந்துகள் எல்லாவித இயற்கை மருத்துவமும் (ஆயுர்வேதம், சீனத்து மூலிகைகள் முதலியவை) பாதிப்பை உண்டாக்காது என்ற எண்ணம் பரவலாக உண்டு. அது தவறு. இவ்வகை மருந்துகளில் ஒரு சிலவற்றில் உலோகக் கலப்புக்கள் மிக அதிக அளவில் இருக்கும். விஷப் பொருட்களும் அடங்கி இருக்கும். அவை சிறுநீரகங்களை பாதிக்கும். மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களை உடையவர்களுக்கு இவை மேலும் பாதிப்பைக் கொண்டு வரும். பொட்டாசியம் இருக்கும் சில மருந்துகள் இறப்பையே சமீபிக்க வைக்கும். ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil