கல்லீரல் அழற்சி ஒரு வித வைரஸ்கள் கல்லீரலை பாதிக்கும் போது ஏற்படும் நோயாகும். இந்நோய் சில குறிப்பிட்ட காலங்களில் அதிகமாக மக்களைப் பாதிக்கிறது. இந்த வகை வைரஸ்கள் சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலமாக உடலிற்குள் புகுகிறது. இதன் நோய்த் தன்மை பெருக்கும் காலம் 15 முதல் 20 நாட்களாகும். நோய் அறிகுறிகள் பசியின்மை. குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுதல், காய்ச்சல், உடற் சோர்வு வயிற்றில் இலேசான வலி கல்லீரல் வீக்கம் கண்ணிண் வெண்படலம் மஞ்சள் நிறமாக மாறும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாகும். மருத்துவ சிகிட்சையும் செவிலிய பராமரிப்பும் நோயாளிக்கு முழு ஓய்வு தேவை குளுக்கோஸ், வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த பானங்கள் அதிக அளவு கொடுக்க வேண்டும். (ஆரஞ்சு சாறு, கரும்பு சாறு, எலுமிச்சம்பழச் சாறு, குளுக்கோஸ் தண்ணீர் முதலியவை) ஆன்டிபயாடிக் மற்றும் மற்ற மருந்துகள் மேலும் கல்லீரலை பாதிக்கும் என்பதால் அம்மருந்துகள் தொற்று கல்லீரல் அழற்சி நோய்க்கு கொடுக்கப்படுவதில்லை எளிதில் ஜீரணிக்கக்கூடிய கொழுப்புச் சத்து மற்றும் புரதச்சத்து குறைந்த உணவினை நோயாளிக்கு அளிக்க வேண்டும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் நோயுற்யோரின் மலத்தை தகுந்த முறையில் அப்புறப்படுத்துவதின் மூலம் நோய் பரவுதலை தடுக்கலாம். நோயாளியை கவனித்த பின் கைகளை நன்கு சுத்தம் செய்வதன் மூலம் நோயாளியிடமிருந்து மற்றவர்க்கு நோய் பரவுதலை தடுக்கலாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுற்றுப்புற தூய்மை மூலம் இந்த சமுதாயம் தொற்று கல்லீரல் அழற்சி நோயிலிருந்து விடுபட முடியும். தீவிர வயிறு மற்றும் குடல் சார்ந்த வயிற்றுப் போக்கு இந்நோய் பாக்டீரியாக்களின் தொற்றினால் குறுகிய காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்காகும். இதன் நோய் நுண்மப் பெருக்கும் காலம் 1-7 நாட்களாகும். சில சமயங்களில் 6 மணி நேரத்தில் கூட தொற்று ஏற்படலாம். நோய் அறிகுறிகள் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்படுதல் வயிற்றுத் தசைகளில் இழுத்துப் பிடித்தல் குமட்டல் மற்றும் வாந்தி மிதமான காய்ச்சல், உடலின் நீர் இழப்பு அதிகமாக இருத்தல். மருத்துவ சிகிட்சையும் செவிலிய பராமரிப்பும் நோயாளிக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படும் நேரத்தில் கீழ்க்கண்ட வாய்வழி திரவங்களை செவிலியர்கள் தயார் செய்து அளிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீர் 1 லிட்டர் (4 கப்புகள்) 9 குளுகோஸ் 20 கிராம் அல்லது 8 தேக்கரண்டி சாதாரண சமையல் உப்பு 2 கிராம் அல்லது 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா (சோடியம்-பை-கார்பனேட்) 2 கி அல்லது 1/2 தேக்கரண்டி பொட்டாசியம் குளோரைடு 1 1/2 கிராம் அல்லது 1/2 தேக்கரண்டி நோயாளியின் உடல்நீர் இழப்பை வாய்வழி திரவங்களை கொழுப்புகள் மூலமாகவோ சிரைகள் மூலம் திரவங்கள் கொடுப்பதின் மூலமாகவோ உடனடியாக சரி செய்ய வேண்டும். பெரியவர்களும் வளர்ந்த குழந்தைகளும் இளநீர் பால் கலக்காத இனிப்புத் தேனீர் போன்ற திரவங்களை அதிக அளவில் கொடுக்கலாம். நோயாளி வயிற்றுப் போக்கிலிருந்து குணமடையும் பொழுது நன்கு வெந்த சாதம், பிஸ்கட்டுகள் போன்ற மிதமான உணவை கொடுக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின்படி ஆம்பிசிலின் (அ) டெட்ராசைக்கிளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் அளிக்கலாம். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் நோயாளியைத் தனிமைப்படுத்துவதன் மூலம் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்கு நோய்த்தொற்று பரவுவதை (குறுக்குத் தொற்று) தடுக்கலாம் சுகாதார முறையில் பாதுகாக்கப்பட்ட உணவு, நீர் மற்றும் பாலை உண்ண வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மலக்கழிவுகளை சுகாதார முறையில் அப்புறப்படுத்துதல் ஆதாரம் : தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை கையேடு