தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள் யாவன?

மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.

விட்டில்லிகோ

போஸ்ட் இன்பிளமேடரி ஹைபோபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்

அல்பினிசம்

விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.

விட்டில்லிகோ என்றால் என்ன?

விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.

லியுகோடெர்மா என்றால் என்ன?

லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.

விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?

தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.

இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்

மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை

போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன்  என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.

அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.