தொழில் காரணமான ஆஸ்துமா நோய் / தொய்வு

தொழில் நிறுவனத்தில் ஆபத்துக்குரிய கழிவுப் பொருட்களுடன் வெளிப்படுத்தப்படும் போது பல நுரையீரல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அவையாவன - ஆஸ்துமா நோய்/ தொய்வு

நுரையீரல்கள் நார்த்தன்மை அடைதல்

காசநோய்

ஒவ்வாமைத் தாக்க நுரையீரல் அழற்சி

சுவாசக்குழாய் அரிப்பு / அழற்சி

நுரையீரல் புற்றுநோய்கள் என்பன.

இதற்குரிய காரணங்களாக புகைப்பிடித்தல், கோதுமை, கறுவா, பட்டு, சயனேறுக்கள், மரவகைகள், தேயிலை, அரிசி போன்ற உற்பத்தி / தொழில் நிறுவனங்கள் காணப்படுகின்றன. இது பொதுவான ஆஸ்துமா நோயிலிருந்து வேறுபட்டதல்ல. ஆயின் சிகைச்சையின் விளைவிகள் உடனடியாகவோ (சில நிமிடங்களில்) தாமதித்தோ (சில மணிநேரங்களில்/ வருடங்களில்) ஏற்படலாம்.

தாவரங்கள்

தேயிலையினை பறிக்கும் போது அரைக்கும் போது மற்றும் பொதி செய்யும் போது நுண்ணிய துகள்கள் வெளியேற்றப்படும். தொழிலாளர்கள் இவற்றுக்கு வெளிப்படும் போது தேயிலை உற்பத்தியாளர்களின் ஆஸ்துமா நோய் எனும் நோய் நிலைமை உருவாகிறது.

கறுவாவினது பட்டையானது கறுவாத் தாவரத்தின் உலர்ந்த தண்டுப்பகுதியிலிருந்து பெறப்படுகிறது. கறுவாவினை வெட்டுதல் மற்றும் பிரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் கறுவாவினது துகள்கள் வெளிப்படுத்தப்படுவதனால் ஆஸ்துமா போன்ற நோய் ஏற்படுத்தப்படலாம்.

இலங்கையில் கோதுமை உற்பத்தி செய்யப்படாத போதும் கோதுமையினை கப்பலிலிருந்து இறக்குதல், அரைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களில் கோதுமையின் துகள்களுக்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை ஆலை தொழிலாளர்களின் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது.

விலங்குகள்

பட்டானது பட்டு நூற்களிலிருந்து நெய்யப்படுகிறது. பட்டு நூலானது பட்டுப்புழுவின் உரோமங்களிலிருந்து பெறப்படுகிறது. பட்டு நூலானது பசைத்தன்மையான பதார்த்தத்தினால் சூழப்பட்டிருக்கும். இதன் காரணமாக பட்டு உற்பத்தியல் ஈடுபடும் தொழிலாளர்களில் ஆஸ்துமா போன்ற நிலமை ஏற்படுத்தப்படலாம்.

இரசாயனப் பொருட்கள்

பொலியுரத்தேன்கள் குஷன் எனும் சோகுசு மெத்தைகள், வெப்பக்காவலிகள், மென் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வார்னிஷ் எனும் பூச்சுக்கள் ஏனைய பூச்சு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஐசோசயனேற் எனும் பதார்த்தத்தை வெளியிடுகின்றது. இதன் காரணமாக ஆஸ்துமா நோய், சடுதியான அல்லது நாட்பட்ட சுவாசக்குழாய் அழற்சி மற்றும் அரிதாக நுரையீரல் அழற்சி என்பன ஏற்படுத்தப்படலாம்.

எச்சரிக்கை

தாவர வகைகளால் தூண்டப்படும் ஆஸ்துமாவைப் போலன்றி ஐசோசயனேற்றால் தூண்டப்படும் ஆஸ்துமா தொழிலாளர்கள் அத் தொழிற் சூழலிலிருந்து விலகிய பின்னும் அல்லது வேறு தொழில் வழங்கப்பட்ட போதும் அதன் தாக்கங்கள் தொடர்ந்து காணப்படும்.

ஆதாரம் : ஆரோக்கியதகவல்