கண்ணோட்டம் மனித மெட்டாநீமோ வைரஸ் (HMPV) என்பது ஒரு சளி மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய சுவாச நோயாகும். 2001 இல் HMPV கண்டறியப்பட்டது. சுவாச சின்சீஷியல் வைரஸ் (Respiratory Syncytial Virus (RSV)) உடன் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்தது HMPV. இது அனைத்து வயதினருக்கும், குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு, மேல் மற்றும் கீழ் சுவாச மண்டல நோய்களை ஏற்படுத்தும். HMPV பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு கீழ்கண்டவாறு பரவுகிறது இருமல் மற்றும் தும்மலின் போது பரவும் திரவிய துகள்கள் தொடுதல் அல்லது கைகுலுக்குதல் போன்ற தனிப்பட்ட தொடர்பு வைரஸ் உள்ள பொருள்கள் அல்லது பரப்புகளைத் தொட்டு பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுதல் இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். தடுப்பு நடவடிக்கைகள் செய்ய வேண்டியவை: இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் மூடவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும். நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு கை அளவுக்கு மேல் இடைவெளி பின்பற்றவும். உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது தும்மல் இருந்தால் வீட்டிலேயே இருக்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும். வெளிப்புற காற்றுடன் போதுமான காற்றோட்டம் வசதி தேவை. செய்யக்கூடாதவை: கைகுலுக்கல். பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் அல்லது கைக்குட்டையை மீண்டும் பயன்படுத்துதல். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு. கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல். பொது இடங்களில் எச்சில் துப்புதல். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது. ஆதாரங்கள் https://www.cdc.gov/human-metapneumovirus/about/index.html