அறிமுகம்

இது மனிதர்களுக்கு ஏற்படும் சுவாச நோய். சார்ஸ் கொரோனாவைரசால் (SARS-CoV) உண்டாகிறது. இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு வகை கடுமையான நிமோனியா ஆகும். இந்நோய் 2002-ல் சீனாவின் குவாங்டாங் பகுதியில் தோன்றியது. விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவியது (பரவல் தொற்று). முடிவாக இந்த வைரசைக் கட்டுப்படுத்துவதற்குள் 8000 பேர் பாதிக்கப்பட்டு 774 பேர் மரணம் அடைந்தனர்.

நோயறிகுறிகள்

சார்ஸ் நோய்க்கு விஷக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது நோயரும்பும் காலமான 2-10 நாட்களுக்குப் பின் உண்டாகும். அவற்றில் அடங்குவன:

அதிகக் காய்ச்சல் 38ºC (100.4ºF), அதற்கு மேலும்

அதிகக் களைப்பு

தலைவலி

குளிர்

தசை வலி

பசியின்மை

வயிற்றுப்போக்கு

காரணங்கள்

கொரோனா வைரசுகள் நேர்-இழை பொதிந்த RNA வைரசுகள். இவை பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்பரப்பும் கிருமிகளாகும். இந்த வகை வைரசுகள், மனிதர்கள், கால்நடைகள், செல்லப்பிராணிகள் உள்ளடங்கிய பெருவாரியான விலங்குகளில் குடல் மற்றும் சுவாச நோய்களை உண்டாக்குகின்றன.

நோய்கண்டறிதல்

பாலிமரேஸ் தொடர் வினை (PCR): இரத்தம், மலம், சுவாச மண்டலக் கழிவுகள், உடல் திசுக்கள் போன்ற பல்வேறு மாதிரிகளில் சார்ஸ்-CoV வைரசின் மரபியல் பொருட்களை இச்சோதனை கண்டறியும்.

இயக்குநீர் இணைப்பு எதிர்பொருள் உறிஞ்சுதல் மதிப்பீடு (ELISA) : நோய் ஏற்பட்டு 21 நாட்களுக்குப் பின் நோயாளியின் ஊனீரில் IgM மற்றும் IgG எதிர்பொருள் கலவையைக் கண்டறிகிறது.

எதிர்பொருள் ஒளிர்தல் மதிப்பீடு (IFA): நோய் ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பின் நோயாளியின் ஊனீரில் IgM எதிர்பொருட்களைக் கண்டறிகிறது. இச்சோதனை வடிவம் IgG சோதனைக்கும் பயன்படுத்தப் படுகிறது. இது ஒரு நம்பத்தகுந்த சோதனை. இதற்கு ஒரு எதிர்பொருள் ஒளிர்தல் நுண்காட்டியில் நிலையான சார்ஸ் வைரசை பயன்படுத்த வேண்டும். நேர்மறையான எதிர்பொருள் சோதனை முடிவு சார்ஸ் - CoV வைரசின் ஒரு முந்திய தொற்றை சுட்டிக்காட்டுகிறது. ஊனீர் எதிர்மறையில் இருந்து நேர்மறைக்கு மாறினால் அல்லது கடுமையில் இருந்து நோய்நீங்கி நலம்பெறும் கால ஊனீர் நான்கு மடங்கு எதிரியக்க அளவைக் காட்டினால் அது அண்மைத் தொற்றைக் குறிப்பதாகும்.

எதிர்மறை எதிர்பொருள் சோதனை முடிவுகள்:

நோய் ஏற்பட்டு 21 நாட்கள் கழித்து எதிர்பொருட்கள் கண்டறியப்பட வில்லை என்றால் சார்ஸ்- CoV வைரஸ் தொற்று இல்லை என்று பொருள்.

நோய் மேலாண்மை

முக்கியமாக ஆதரவு சிகிச்சையே அளிக்கப்படும். அவற்றில் அடங்குவன:

செயற்கை சுவாசம்

நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க அதிக அளவு ஊக்கமருந்து

நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள்

வைரல் நோயாக இருந்தால் எதிர்வைரல் மருந்துகள்

தடுப்புமுறை

தொற்றைத் தடுக்க கீழ்வரும் தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ஆல்ககால் அடங்கிய கிருமிநாசினியால் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

தும்மும்/இருமும் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.

உணவு, பானங்கள், பாத்திரங்களைப் பரிமாறிக்கொள்ளக் கூடாது.

கிருமிநாசினியால் (திண்ணை, மேசை, தரை போன்ற) பரப்புகளை முறையாகக் கழுவ வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்