சிறுநீர்த்தாரை கசிவு நோய்அறிகுறிகள் ஆண்களிடம் காணப்படுகிறது

கசிவு ஆண்குறி வழியாக ஏற்படுகிறது. கசிவு சீழாகவோ சளி போன்றோ இருக்கலாம்.

அளவு பொங்கி வழிவது போன்றோ மிதமாகவோ இருக்கலாம்

இத்துடன் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது அசௌகரியம் இருக்கும்

ஆண்குறி விரைப்படையும்போது அல்லது உடலுறவின்போது வலி இருக்கும்

பரவும் முறை

இந்த ஒத்த வகை நோய் அறிகுறிகள் கோனோரியா, க்ளாமிடியா, ட்ரைக்கோமோனாஸ், பாக்டீரியல் வஜினோசிஸ் மற்றும் காண்டிடொசிஸ் ஆகியவற்றால் ஏற்படும்.

நோயாளி நோய்த்தொற்றுள்ள துணைவரிடம் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால் இந்த தொற்றுகள் ஏற்பட்டிருக்கும். இது பாதுகாப்பற்ற பிறப்புறுப்பு வழி வாய்வழி அல்லது ஆசனவாய்வழி உடலுறவின் மூலம் பெண் அல்லது ஆண் துணைவரிடமிருந்து பரவியிருக்கலாம்

கோனோரியா, க்ளாமிடியா மற்றும் அல்லது ட்ரைக்கோமோனாஸ் ஆகியவற்றால் தொற்றுக்குள்ளான துணைவர் நோய் அறிகுறியுடனோ அறிகுறி இல்லாமலோ இருக்கலாம்.

நோய்த்தடுப்பு

நோயாளி முழுமையாக சிகிச்சை முடியும் வரை மற்றும் வெள்ளை கசிவு முழுமையாக நிற்கும் வரையாருடனும் உடலுறவு கொள்ளக்கூடாது. உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்றால் நோயாளி ஒவ்வொரு உடலுறவுக்கும் முறையாக தொடர்ந்து ஆணுறை பயன்படுத்த வேண்டும்.

துணைவர் கர்ப்பமாக இருந்தால் நோயாளி அதை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் துணைவருக்கு முறையாக சிகிச்சை அளித்து நோய்த்தொற்று பிறக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்க முடியும்.

சிகிச்சை

சிறுநீர்த்தாரை கசிவு நோய் அறிகுறிகளை நோயாளி மற்றும் அவர் துணைவர்கள் முறையான மற்றும் முழுமையான சிகிச்சை எடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இதற்கான சிகிச்சையை சிகிச்சை மையத்தில் மருத்துவ பணியாளரின் முன்னிலையில் எடுக்க வேண்டும். இது டாட்ஸ் - எஸ்டிஐ (நேரடியாக கண்காணிக்கும் சிகிச்சை - குறுகிய காலம்)

இதற்கு கொடுக்கப்படும் மருந்துடன் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்

மருந்து

அசித்ரோமைசின் (1கிராம்) – ஒரே வேளை ஒரு நாள் மட்டும் செஃபிக்சிம் 400 மிகி ஒரே வேளை ஒரு நாள் மட்டும்

விளைவுகள்

மலட்டுத்தன்மை ஏற்படலாம்

இந்த நோய் பெண்களிடமும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்

மிக அரிதாக இந்த தொற்று உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது

நோயாளி கொனோரியா மற்றும் க்ளாமிடியா ஆகிய நோய்களை கர்ப்பிணி துணைவருக்கு பரப்பினால் அது பிரசவ நேரத்தில் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் கண் பார்வையை பாதித்து பார்வையின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

துணைவரைபரிந்துரை செய்தல்

நோயாளி கடந்த ஒரு மாதத்தில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்களுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை

ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம்