மையிலோஸைடிக் லுகீமியா

மையிலோஸைடிக் லுகீமியா (சீ எம் எல் ), எந்த வயதில் உள்ள மக்களையோ அல்லது இரு பாலினரையும் பாதிக்கலாம், ஆனால் இது 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடையே காண்பது அறிது. இந்த நோய் பெரும்பாலும் 40 முதல் 60 வயதிற்குள் இருக்கும் பெரியவர்களுக்கு உண்டாகிறது. இதற்கான காரணம், இரண்டு குறிப்பிட்ட குரோமோஸோம்கள், பிலடெல்பியா குரோமோஸோம் என்று அழைக்கப்படுவதாக மாற்றி அமைக்கப்படுகின்றது. பிலடெல்பியா குரோமோஸோம், டைரோஸின் கைனேஸ் எனும் வித்தியாசமான என்சைமை சுரக்க செய்கின்றது. இது தான் வெள்ளை அணுக்களின் அசாதாரண வளர்ச்சிக்கு காரணமாகிறது. சீ எம் எல் லில், அதிகபட்சமான லுகீமியா அணுக்கள் எலும்பு மஜ்ஜையில்தான் உருவாகின்றது, ஆனால் சில அணுக்கள் கல்லீரல் மற்றும் கணையத்திலும் உருவாகின்றது. அதிகமாக வளர்ச்சியடயாத வெள்ளை அணுக்களில் காணப்படும் தீவிர லுகீமியாவிற்கு மாறாக சீ எம் எல்-ல் சாதாரனமாக காணப்படும் வெள்ளை அணுக்கள் மற்றும், சில நேரங்களில்
பிளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. நோய் வளரும் காலகட்டத்தில், மேலும் மேலும் அதிகமான லுகீமியா அணுக்கள் எலும்பு மஜ்ஜையை நிரப்புகின்றன, மற்றும் சில அணுக்கள் இரத்த நாளங்களை சென்றடைகின்றன.

அறிகுறிகள்

இந்த லுகீமியா அணுக்கள் கடைசியாக மேலும் மாற்றமடைகின்றன. மேலும் நோய் வெகு தீவிர நிலைக்கு மாறி தவிர்க்கமுடியாத வெடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. வெடிக்கும் நிலையில் கணையம் மிகவும் அதிகமாக வீங்குவதும் இயல்பானது. காய்ச்சல் மற்றும் உடல் எடை குறைவதும் இயல்பானதுதான்.
அறிகுறிகள் மற்றும் நோயை கண்டறிதல்- நோயின் நீண்ட காலக்கட்டத்தின் ஆரம்பத்தில், சீ எம் எல் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில நோயாளிகள் சோர்வு மற்றும் தளர்ச்சி அடையலாம், பசியின்மை ஏற்படலாம், காய்ச்சல் ஏற்படலாம் அல்லது இரவில் அதிகமாக வியர்க்கலாம். மற்றும் வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம் – இது வீங்கிய கணையத்தால் ஏற்படுகிறது. நோய் வெடிக்கும் கட்டத்திற்கு முன்னேறும் போது, சிவப்பு அணுக்கள் மற்றும் பிளைட்லெட்களின் எண்ணிக்கை குறைவதனால்
பாதிக்கப்பட்டவர் மிகவும் தளர்ச்சி அடைகிறார். இதனால் அவர் வெளுத்து காணப்படுவதோடு இரத்தம் கட்டுதல் மற்றும் இரத்தம் கசிதலும் அவருக்கு ஏற்படுகிறது

நோய் கண்டறிதல்

சாதாரண இரத்த பரிசோதனையின் அடிப்படையில் சி எம் எல் நோய் இருக்கலாம் என கண்டறியப்படுகிறது. பரிசோதனையில் அசாதாரனமாக வெள்ளை அணுக்கள் அதிகமாக காணப்படுகிறது. நுண்நோக்கி மூலம் இரத்த பரிசோதனை செய்து பார்தால், சாதாரணமாக எலும்பு மஜ்ஜையில் காணப்படும் வளர்ச்சி குறைந்த வெள்ளை அணுக்கள் இரத்ததில் காணப்படும்.

நோயை தீர்மானிக்க, பிலடெல்பியா மரபனு சோதனைகள் (சைடோஜெனெடிக்ஸ் அல்லது மாலிகுலார் ஜெனெடிக்ஸ்) தேவைப்படுகின்றன.

சிகிச்சை

சிகிச்சைகள் நோயை குணப்படுத்தாவிட்டாலும், அதன் வளர்ச்சியின் வேகத்தை கட்டாயம் குறைக்கின்றது. புதிய மருந்துகள் பிலடெல்பியா மரபனுவால் சுரக்கப்படும் அசாதரணமான என்சைமை தடுக்கின்றன. இந்த மருந்துகள் மற்ற சிகிச்சைகளைவிட அதிக பலன் தருகின்றன, மேலும் சிறிய பக்க விளைவுகளையே உண்டாகின்றன

நோய் கண்டறிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோடு வாழ்வது 90% வரை சாத்தியம் உள்ளது

ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, அதிக தீவிர தன்மையுடய கீமோதெராபி மருந்துகளுடன் தரப்படுவது சீ எம் எலை குணப்படுத்தலாம். ஆனால் சில நோயாளிகள் மட்டுமே மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஸ்டெம் செல்கள் பொதுவாக உடன் பிறந்தோரிடமிருந்தோ அல்லது ஒத்துவரும் திசுக்களுடய வேறு தானம் தருவோரிடமிருந்து மட்டும் தான் பெறப்படவேண்டும்.

நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் மாற்று சிகிச்சை மிகுந்த பலன் தருகிறது. சீ எம் எல் வேகமாக வளர்ச்சி அடையும்போதோ அல்லது வெடிக்கும் தருணத்தை அடையும் போதோ இந்த சிகிச்சை குறைந்த பலனையே தருகின்றது.

வெடிக்கும் கட்டத்தை அடைந்த நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். சில சமயம் கீமோதெராபி மருந்துகள் வாழ்நாளை 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கலாம்.

நோய் மீண்டும் வந்தவருக்கோ அல்லது பிலடெல்பியா மரபனு இல்லாத சீ எம் எல் நோயாளிகளுக்கு பழைய முறையிலான கீமோதெராபி சிகிச்சைகளும் உள்ளன. எந்த மருந்துகளும் வாழ்நாளை நீட்டிப்பதில்லை. ஆனால் கைநேஸால் உண்டாகும் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கலாம். கைநேஸ் தான் சீ எம் எல் இல் அசாதாரனமான வெள்ளை அணுக்களின் வளர்ச்சிக்கு காரணமானது.