வெறிநாய்க்கடி இது விலங்குகளைத் தாக்கும் ஒரு நோய். பொதுவாக நாய்களையும் பூனைகளையும் குள்ள நரிகளையும் கொண்டு தாக்கி மற்றும் நீர்வீதி' என்னும் பெயரைப் பெறுகிறது. நோய் பரப்பும் நுண்ணுயிரி: லாசா வைரஸ் டைப் 1 மூலம் பரவும் நோய் பரவும் விதம்: விலங்குகள் கடிப்பதால் வேகமாக பரவும் வெறிபிடித்த நாயின் கடியினாலோ, நக்குதலினாலோ பரவும் மற்றும் உமிழ்நீரின் மூலமும் பரவும். நோய் முற்றும் காலம் 1-3 மாதங்கள் அறிகுறிகள் தலைவலி, மிதமான காய்ச்சல் உடல் நலக்குறைபாடு கடிபட்ட இடத்தில் வலி மற்றும் மறுத்துப்போதல் விழுங்குதலில் சிரமம் கடிபட்ட இடத்தில் வலி அதிக வெளிச்சத்தை பொறுத்துக் கொள்ள முடியாது நீர் பீதி உணவுப் பொருட்களையும் விழுங்குவதில் சிரமம் சுவாசத் தசைப்பிடிப்பு வலிப்பும் ஏற்படலாம். சிகிச்சை பகுதி சிகிச்சை : முதலில் காயத்தை சில நிமிடங்களுக்கு சோப்பும், நீரும் கொண்டு கழுவுதல். வைரஸ் தாக்காத வகையில் ஆல்கஹால் (அ) டிஞ்சர் அயோடின் பயன்படுத்தி, வைரஸை சாகடிக்க வேண்டும் மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும். கட்டுகளை பயன்படுத்தி காயத்தை சுத்தப்படுத்துதல் : ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டுகளை பயன்படுத்தி காயத்தை சுத்தப்படுத்தும் போது மிக விரைவில் குணமடையும். 10 நாட்களுக்கு நாய்களை கண்காணிக்க வேண்டும். ஆன்டி ராபிஸ் வாக்சின் கொடுக்க வேண்டும். வாக்சினேஷன் 6 தவணைகள் 1 ml ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும். தசை வழியாக (டெல்டாய்ட) ஊசிகள் 03,7,14,28….90 நாட்களுக்கு ஊக்குவிப்பு தவணையாக செலுத்த வேண்டும். தனித்து வைத்தல், குளிர்ந்த இடத்திலோ (அ) குளிர்ப்பகுதியை தூண்டக் கூடிய நிலையில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். யூனிவெர்சல் முன்னெச்சரிக்கைகளை கையாள வேண்டும். தடுப்பு முறைகள்: எல்லா வீட்டு விலங்குகளையும் பதிவு செய்து வளர்க்க வேண்டும். வெறிநாய்களை அழித்து விட வேண்டும். பொது இடங்களில் நாய்களை கட்டுப்படுத்துதல் வெறிநாய்க்கடியை தடுக்கக்கூடிய மற்றும் குணமளிக்கக் கூடிய மருந்துகளை 3 மாத கால வயது இருக்கும் நாய்களுக்கு தடுப்பூசி மூலம் போட வேண்டும். ஒவ்வொரு 3 வருடக்காலமும் ஊக்குவிப்பு தவணை கொடுக்க வேண்டும். லெப்டோஸ்பைரோசிஸ் விலங்கினம் - மனிதனுக்கு தொற்றக்கூடிய நோய். இது மிகவும் அதிகமாக பரந்த நிலையில் பரவக் கூடும். நோய் பரப்பும் நுண்ணுயிரி: லெப்டோஸ்பைராவின், பலவகையான ஸ்சிரோடைப்ஸ் (ஸ்பைரோகிட்ஸ்) பரவும் விதம்: a. நோடித் தொடர்பு: தோலில் கொப்புளங்களுடன் உடல் முழுவதும் நுழையக்கூடியது (அ) நோய்த்தொற்றுள்ள விலங்கு (அ) சிறுநீர் அ) திசுக்களின் மூலம் மற்றும் நேரடித் தொடர்பினால் பாதிக்கக் கூடிய சவ்வுப்படலத்திலும் பரவுகிறது. b. மறைமுகத் தொடர்பு: இவ்வகையான தொடர்பு அழுக்கடைந்த நீரினாலும், ஜீரணிக்கப்படாத உணவினாலும், மற்றும் நோய்த்தொற்றுள்ள விலங்களினாலும், அழுக்கடைந்த சிறுநீரினாலும் தோலில் காயம் ஏற்படுவதினாலும் மற்றும் அழுக்கடைந்த நீரினாலும் பரவுகிறது. C. சிதறல் வகை (அ) சளித்துளிகள் மூலம் : காற்று அசுத்தமடைவதின் காரணமாகவும், சளித்தளிகளின் காரணமாகவும், நோய்த்தொற்றுள்ள பசுக்கள், ஆடுகள், மற்றும் பால் உள்ளிட்ட உணவுகள் இதன் வழியாக நாம் சுவாசிக்கும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. நோய் முற்றும் காலம்: பொதுவாக 10 நாட்கள் நிலை பொறுத்து 4 - 20 நாட்கள் அறிகுறிகள் சில சமயங்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு சிகிச்சை : ஆன்டிபயாடிக் - பென்சிலின் தேவைப்பட்டால் கொடுக்கலாம். மிக பயனுள்ள வகையில் டெட்ராசைக்கிளின் (அ) டாக்சிசைக்கிளின் கொடுக்கலாம். தடுப்பு முறை மற்றும் தடுப்பு நடவடிக்கை 1. அழுக்கடைந்த நீரை அப்புறப்படுத்தி, நோயைத் தடுத்தல், எலியை கட்டுப்படுத்துதல் 2. இடிப்பாடுள்ள வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். 3. தேங்கிய நீர்ப்பரப்புகளை சரிசெய்தல் 4. சுகாதார போதனை பிளேக் இது ஆரம்ப நிலையான மற்றும் அடிப்படையான, அபாயகரமான நோய்த் தொற்றுதலுக்குட்பட்ட விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோயாகும். நோய்பரப்பும் நுண்ணுயிரி: எஸ்சினியா பெஸ்டிஸ் பரவும் விதம்: தொற்றுதலுக்குட்பட்ட எலி கடிப்பதால் தொற்றுள்ள விலங்களிடமிருந்தும், திசுக்களினாலும், நேரடித் தொடர்வினாலும் பரவும். சளித்துளிகள் மூலம் நிமோனியா பிளேக் நுரையீரலை பாதிக்கும் 5 வகைளினால் பரவலாம்: ப்யூபானிக் வகை : எலி கடி - மனிதன் மூலம் பரவும் - இவை ஆரம்ப நிலைக்குறியவை வைல்டு ரோடன்ஸ்: தொற்றுள்ள மனிதனிடமிருந்து இவை எளிதாக பரவக் கூடும். பிரிடோமஸ்டிக் ரோடன்ஸ் - ப்ளேக் நோயானது தொற்றுள்ள மனிதனிடமிருந்தும் பூச்சிகளின் மூலம் மற்றும் எலிகளிடத்திலிருந்து மிக விரைவாக பரவக் கூடும். நோய் முற்றும் காலம் : a. ப்யூபானிக் வகை ப்ளேக் 2 - 7 நாட்கள் b. நிமோனிக் வகை பிளேக் 5 - 7 நாட்கள் C. செப்டிசீமிக் பிளேக் 1-3 நாட்கள் அறிகுறிகள்: a.ப்யூபானிக் ப்ளேக்: திடீரென்று காய்ச்சல், சில்லிட்டுப் போதல் தலைவலி வலி நிணநீச்சுரப்பிகளில் வலி, பிதற்றல். சில நாட்களில் நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி வலி உண்டாக்கி, அழுகிப் போகலாம் (அ) வெடிக்கலாம். அக்குள், கழுத்து, தொடைச் சுற்று பகுதிகளில் நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி காணப்படும். b.நிமோனிக் வகை : நோய்த்தொற்றுதலுக்குட்பட்ட ஒரு மனிதனிடமிருந்து சுவாசப் பாதை வழியாக அடைபப் பெறுதல், சில சயமங்களில் இவை ப்யூபானிக் வகை, செப்டிசீமிக் வகை சிக்கல்களையும் ஏற்படுத்தும், சளியில் அதிக அளவில் ப்ளேக் பாசில்லை தங்கியிருக்கும். C. செப்டிசீமிக் வகை : இதுவும் ப்யூபானிக் ப்ளேக் மற்றும் செப்டிசீமிக் வகை நோய்த் தொற்றினால், ஆரம்ப நிலைகளில் பரவக் கூடியதாக இருக்கும். சிகிச்சை : உடல் எடையில், தசை வழியாக 2 விளக்கப்பட்ட தவணைகளில் 7- 10 நாட்கள் ஸ்ட்ரெப்டோமைசின் 30 மி.கி 1 கி.கி. உடல் எடையில் திசைரி 30 - 40 டெட்ராசைக்கின் வாய்வழியாக கொடுக்கலாம். சில சமயங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஸ்ட்ரெப்டோமைசின் கொடுக்க வேண்டும். தனித்து வைத்தல் : தொற்றுள்ள மனிதர்களை தனிப்படுத்தி வைக்க வேண்டும், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் சளிப் பொருட்களை தகுந்த முறையில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கைகளோடு இறந்த உடலை கையாள வேண்டும். தடுப்பு முறைகள் : a. நோயை தடுத்தல் : ஆரம்ப நிலையில் கண்டறிதல் : பகுதி குறிப்பிட்ட கொள்ளை நோயாக இருப்பதால், ப்ளேக்கினால் பாதிக்கப்பட்ட நபர்கள் பாக்டீரியோலாஜிகல் முறைப்படி பரிசோதனை செய்வது மிக முக்கியம். b. அறிவித்தல் : சுகாதாரப் பணியாளர்களுக்கோ, அலுவலர்களுக்கோ உடனே செய்தி அறிவித்தல் வேண்டும். அப்போது தான் சிகிச்சை அளிக்க முடியும். C. தனித்து வைத்தல் : சந்தேகிக்கப்பட்ட எல்லா நோயாளிகளையும் ப்யூபானிக் ப்ளேக் நோயாளிகள் மற்றும் இதர தொற்று இல்லாத நோயாளிகளையும் தனிமைப் படுத்துதல் வேண்டும். d. சிகிச்சை : நோய் அறியும் வரை காத்திருக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால், அதிக இறப்பு விகிதத்தை குறைக்கலாம். e. தொற்று நீக்குதல் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள், துணிகள், மற்றும் ஓழுக்களை தொற்று நீக்கம் செய்ய வேண்டும். செப்டிக் முன்னெச்சரிக்கைகளோடு நோயாளியின் இறந்த உடலை கவனிக்க வேண்டும். பூச்சிகளை தடுத்தல் : பயனுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை அழிப்பதும் பரவும் சங்கிலி உடைப்பதும் மிகவும் முக்கியம். நோய்த் தொற்றுகளை தகுந்த பூச்சி கொல்லி மருந்துகளை DDT மற்றும் BHC இவை பயன்படுத்தி அழிக்கலாம் (10% மற்றும் 3%) பூச்சிகளை அழித்தல் : சுத்தமான பொதுவான கழிவறைகள் பயன்படுத்துதல், நல்ல வீட்டு வசதி தடுப்பூசி போடுதல் : தடுப்பிற்கு தடுப்பூசி ஒரு தகுந்த முறையாகும். தடுப்பூசி தோலுக்கடியில் 2 தவணைகள் 0.5 - 1.0 மி.லி. இடைவெளி விட்டு 7 to 14 நாட்கள் கொடுக்கலாம். கீமோபுரோஃபைலாகிஸ்: அதிக பாதிப்புள்ள நோய்த்தொற்றை பொது சுகாதார நபர்கள் மற்றும் செவிலிகள் மற்றும் மருந்துகள் செலுத்தி பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. சர்விலென்ஸ் (Surveillance) : மனித ப்ளேக்கை சரிசெய்ய இது ஒரு முறையாகும். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தரக்கூடிய அத்தனை வழிமுறைகளையும் கையாள வேண்டும். சுகாதார போதனை 1 பொது மக்களுக்கு ப்ளேக் நோயின் நிலைகளை எடுத்துக் கூறுதல். இறந்து கிடக்கும் எலிகளைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜப்பானிஸ் என்கெபலைட்டிஸ் இவை கொசுக்களினால் பரவும் நோய்த்தொற்று மட்டுமல்லாமல் முக்கியமாக விலங்குகளின் மூலம் மற்றும் மனிதனிடமிருந்தும் வருகிறது. நோய் பரப்பும் நுண்ணுயிரி : க்யூலக்ஸ் கொசுவினால் பரவும், Group B ஆர்போவைரஸ் ஃபிளாவி வைரஸ்) பரவும் விதம் : தொற்றுள்ள கொசுக்களினால் தொற்றுள்ள மனிதன் மூலம் பரவும் நோய் முற்றும் காலம்: 5 - 15 days அறிகுறிகள் : 1. புரோட்ரோமல் நிலை: உடல்நலக் குறைவு, தலைவலி, காய்ச்சல், திடீரென்று நோய்க் காலம் தோன்றும் 1- 6 நாட்கள் இருக்கும். தீவிர நிலை: காய்ச்ல் 38 - 40.7 °C இருக்கும் கழுத்தில் நெருக்கம் ஏற்படுதல். தாமத நிலை : ஆக்டிவ் தொற்றுக்கு முடிவில் அதாவது வெப்பநிலையும், இரத்த அணுக்கள் படியும் விகிதமும் (ESR) சாதாரணமாக இருக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளும் ஏற்பட்டு, முடிவில் குணமடைவதற்கான நிலை ஏற்படும். தடுப்பு நடவடிக்கைள் : புழு பூச்சிகள் கட்டுப்படுத்துதல் : புழு பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் ஜப்பானிஸ் என்கெபலைட்டிஸ் நோயை எளிதான முறையில் தடுக்கலாம். ULV (Ultra low volume) இவ்வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, நிலத்திலும், நீரிலும் இருக்கும் தொற்றுள்ள வழிமுறைகளை தடுக்கலாம். வாக்சினேஷன்: தடுப்பூசி ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு 4 வாரங்களில் கொடுக்கப்பட்டு பின் ஊக்குவிப்பு தவணை ஒரு வருடத்திற்கு பிறகும், அதற்கு மேற்பட்ட 3 வயதிலும் மற்றும் 10-15 வயது வரையிலும் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை தோலுக்கடியில் 3 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 0.5 மி.லிட்டரும் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 மி.லிட்டரும் கொடுக்க வேண்டும். தொடர்பினால் பரவக்கூடிய நோய்கள் (Diseases transmitted through contact) சொறிசிரங்கு (Scabies) நோய் பரப்பும் நுண்ணுயிரி: சிரங்கு சிறு பூச்சிகள் என்கின்ற ஓட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. பரவும் விதம்: தொற்றுள்ள மனிதனிடமிருந்தும், நெருக்கமான உறவுகள் மூலம் பரவுகிறது. ஒரே படுக்கையில் உறங்குவது (அ) குழந்தைகள் விளையாடுதல் (அ) தொற்றுள்ள நபர் மூலம் சிரங்கு குடும்பத்தார் இடையில் பரவுகிறது. அழுக்கடைந்த துணிவகைகள்: அழுக்கடைந்த துணி வகைகள், படுக்கை விரிப்புகளின் மூலம் பரவுகிறது. அறிகுறிகள்: அதிகமான நமைச்சல், குறிப்பாக இரவில் சொறிந்து விட்டால் வெடிப்புகள் இரு விரல்களுக்கு இடையிலும் மணிக்கட்டிலும் தோன்றும். முழங்கைகளிலும், மார்பகங்களிலும் இடுப்பைச் சுற்றிலும் தொடைகளிலும் பிறப்பு உறுப்புக்களிலும் புட்டங்களிலும் மற்றும் கணுக்கால்களிலும் கூடத் தோன்றும். 2வது வகை நோய்த்தொற்றுகள் சொறிந்து விட்டால், புண்ணாவோ, கொப்புளமாகவோ ஆகி விடும். சிகிச்சை : உடல் புண்ணாக இருக்கும் போது பென்சைல் பென்சோவேட் 25% உலர்ந்த நிலையில் கால்களின் பின் புறம் மற்றும் கன்னங்களிலும் மற்றும் உடல் முழுவதும் சாய வரவு (அ) சவர ப்ரஷ்ஷைக் கொண்டு தடவ வேண்டும். குழந்தைகளுக்கு தலைக்கு தனிக்கவனம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் மூன்றாவது நாள் குளிக்க வைத்த பின் மருந்துகள் தடவி 12 மணி நேரத்துக்கு ஒரு முறை தடவ வேண்டும். படுக்கையின் விரிப்புகளையும், துணிவகைகளையும் மற்றும் எல்லா பொருட்களையும் கழுவி, வெய்யிலில் உலர்த்த வேண்டும். தடுப்பு நடவடிக்கை : *வெந்நீரில் சோப்பும் நீரும் கொண்டு நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். *தொற்றுள்ள மனிதனிடமும் நெருக்கமான தொடர்பு வைத்து கொள்பவரிடம் இருப்பது தவிர்க்க வேண்டும் *தொற்று நீக்கி கரைசலை பயன்படுத்தி படுக்கை விரிப்புகள் மற்றும் அழுக்கடைந்த துணிகளை சுத்தப்படுத்த வேண்டும். - *தொற்றுள்ள குழந்தைகளிடம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ட்ரகோமா ட்ரகோமா அல்லது கண் இமை அரிப்பு நோய் என்பது நெடுநாள் இருக்கும் இமை இணைப்படல அழற்சியாகும் மற்றும் கார்னியா நோய்த்தொற்றாகும். நோய் பரப்பும் நுண்ணுயிரி: கிலம்மிடியா ட்ரோகோமட்டிஸ் நோய் முற்றும் காலம் 5 - 12 நாட்கள் பரவும் விதம்: நேரடித் தொடர்பு - தூக்கம் ; மறைமுகத் தொடர்பு: பொம்மைகள், பொருட்கள் (அ) தொற்றுள்ள மனிதர் (அ) கண்ணில் காணப்படும் ஒழுக்குகள். அறிகுறிகள்: கண்களில் மிதமான அரிப்பு எரிச்சல் மற்றும் தலைவலி தொற்றுள்ள கொப்பளங்கள் கண்ணின் இமைப்பகுதியில் காணப்படும். மங்கிய பார்வை மற்றும் வசதியில்லாத நிலை தீவிர சீழ் நிரம்பிய நிலை ஏற்படும். கண்ணை முழுவதும் கூட மூட முடியாத படி செய்து விடும். இரத்தக் குழாய்கள் கண் இமை இணைப்பு பகுதியை முழுவதுமாக மூடி விடும். சிகிச்சை : வாய்வழியாக சல்ஃபானமைடு ஆன்டி பயாடிக்ஸ், ஆரியோமைசின், டெட்ராசைக்கிளின், எரித்தோமைசின் மற்றும் டெட்ராசைக்கிளின் களிம்புகள் டெட்ராசைக்கிளின் - குழந்தைகளுக்கு அறிகுறிகளும், அடையாளங்களும் தென்பட்டால் 1 நாளைக்கு இரண்டு தடவை 5 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். தடுப்பு முறை: ஆரம்பநிலையில் கண்டறிந்து சிகிச்சை கொடுக்கும் போது குணமளிக்கலாம். சுத்தமான துண்டுகள், படுக்கை விரிப்புகள் பயன்படுத்த வேண்டுமென்று சுகாதார போதனையால் விளக்க வேண்டும். ஈக்களினால் பரவும் முறைகளை தடுத்தல். தனிப்பட்ட சுத்தம். முகத்தில் ஈக்கள் உட்காருவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கும், பச்சிளங் குழந்தைகளக்கும் தடுக்க வேண்டும். ரணஜன்னி (வில்வாத நோய்) இது ஒரு தீவிர நரம்பு தசை சம்பந்தப்பட்ட குறைபாடு ஆகும். இவை இயக்கத் தசைகளின் செயல் இயக்கங்களை சுருங்க செய்து வலிப்புள்ள நிலையை ஏற்படுத்தும். நோய் பரப்பும் நுண்ணுயிரி : க்ளாஸ்டீடியம் டெட்டனி நோய் முற்றும் காலம் : 3- 21 நாட்கள் பரவும் விதம்: டெட்டனஸ் ஸ்போர்ஸ் காயங்களுடன் அசுத்தப்படுவதால் பரவுகிறது. அறிகுறிகள்: வாயை திறக்க முடிவதில்லை, விழுங்குதலில் சிரமம், முகத்தசைளும் பாதிக்கும், வெப்பநிலையில் உயர்வு தென்படும் வேகமான நாடித்துடிப்பு, சுவாசத் தசைகளில் பிடிப்பு மற்றும் நீண்ட நேரம் நீலம் பாரித்து இருக்கும். சிகிச்சை : இருட்டான, அமைதியான அறையில் நோயாளி பராமரிக்கப்பட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சுவாச சிக்கல்களையும், இதய இரத்தக்குழாய்களின் செயல்களையும், கவனித்து அதற்குரிய சிகிச்சைகளை கையாள வேண்டும். * ஒலி, ஒளிமிக்க விளக்குகளை தவிர்க்க வேண்டும். * சில சமயங்களில் நீர்த்துளிகள் உறிஞ்சி எடுக்கப்பட வேண்டும். மூச்சுக்குழல் வெட்டும் அறுவை சிகிச்சை தேவைப்படும். * மின் உறிஞ்சும் கருவியின் துணையுடன் நீர்த்துளிகளை அகற்ற வேண்டும். * இறுதியாக தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சை அளித்தல், வலிப்புகள் வராமல் இருக்க மருந்துகள், தூக்க மாத்திரைகள் இவைகளை பரிந்துரை செய்ய வேண்டும். தடுப்பு மற்றும் பராமரிப்புகள்: ஆக்டிவ் நோய்த்தடுப்பு: இயங்கும் நோய்த்தடுப்பு கொடுத்தால் தடுக்க முடியும். டெட்டனஸ் டாக்சைடு கொடுக்க வேண்டும். வயதிற்கு தகுந்தபடி எல்லோரும் நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 3 - 9 மாதங்கள் DPT இடைவெளி விட்டு கொடுக்க வேண்டும். இன்னும் 2 தவணைகள் செலுத்த வேண்டும். இன்னொரு 2 தவணைகள் 4 ஒரு மாத இடைவெளி விட்டு தசை வழியாக செலுத்தப்படுகிறது. I. ஊக்குவிப்பு தவணை 18 - 24 மாதங்கள் II. ஊக்குவிப்பு தவணை 5 - 6 வயது III. ஊக்குவிப்பு தவணை 10 வயது. கருவுற்றிருக்கும் தாய்மார்கள் (பேறுகாலத்திற்கு முன்காலம்) I. தவணை 10 - 20 வாரங்கள் II. தவணை 24-28 வாரங்கள் ஈட்டிய நோய் எதிர்ப்புதிறன் : சில பரிசோதனைகளின் மூலம் 1500 IU தோலுக்கடியில் டெட்டனஸ் டாக்சைடு ஊசி தற்காலிகமாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. தசைவழியாக டெட்டனஸ் டாக்சாயிடு 250 500 Units 0.5 ml கைகளிலோ (அ) புட்டப்பகுதியிலோ போடவேண்டும். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கருவிலிருக்கும் குழந்தைக்கு நியோநேட்டல் டெட்டனஸ் நோய் வராமல் பாதுகாக்க நீர்க்கசிவுகளுடன் தொடர்பு கொண்ட எல்லாப் பொருட்களையும் தொற்று நீக்க வேண்டும். - ஊசி டெட்டனாஸ் டாக்சாய்டு 0.5 ml கொடுக்க வேண்டும் 24 மணிநேரத்திற்குள் சாணமோ, பவுடரோ காயத்திற்கு மேல் போடக் கூடாது. தொழுநோய் (ஹேன்சன் நோய்) இது ஹேன்சன் நோய் என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. இது தொற்றக் கூடிய, நீண்ட நாள் தொல்லை தரக்கூடிய நரம்புகளை பாதிக்கும் நோயாகும். நோய் பரப்பும் நுண்ணுயிரி மைக்கோ பாக்டீரியம் லெப்ரே நோய் முற்றும் காலம் 3 - 5 வருடங்கள் பரவும் விதம் 1. சளித் துளிகள் மூலம் : மைக்கோபாக்டீரியம் லெப்ரே சளித்துளிகளின் மூலம் பரவுகிறது. 2. தொடர்பு பரவல்: நபர் - நபரிடம் நெருங்கிய தொடர்பு அதிகமான நெருக்கடியும் பெரும்பாலும் தோன்றுகிறது. இவ்வகை தொடர்பு தோல் - தோல் தொடர்பு மற்றும் மண் - பொருட்கள் மூலமாக பரவுகிறது. 3. இதர வழிகள் : தாய்ப்பாலின் மூலம் தொற்று பரவுகிறது. மேலும் லெப்ரோமேடஸ் நாய்கள் புழு பூச்சிகள் கடிப்பதனால், ஊசிகள் குத்திவதினால் பரவுகிறது. அறிகுறிகள்: * தோலின் மேல்பகுதியில் சிவப்பு வட்டங்கள் (அ) வெளிறிய தோல் காணப்படும். * தோல் பளப்பளப்பாகவும் மற்றம் உணர்ச்சியற்ற கடினமான தோல் காணப்படும். * தோலில் கொப்பளம், முடி வளர்ச்சி குறைவு, குறைவாக வியர்த்தல் * வலி இருக்காது, தொட்டு உணரும் போது கைகளிலும் மற்றும் கால்களிலும் வெப்பநிலை காணப்படுதல். * நரம்புகள் தடித்தும் மென்மையடைதலும், முக்கியமாக அல்னார், மீடியம், லேட்ரல் பாப்பிலிடியல் பகுதிகளில் காணப்படுதல், முடிச்சுகள் மற்றும் முண்டுகள் காதுகள், கன்னப்பகுதியில் மற்றும் மூக்குப் பகுதியில் காணப்படுதல், காது மடல்கள் தடித்து காணப்படுதல். * புண்கள், காயங்கள் சீக்கிரமாக ஆறாது * மூக்கின் ஓரத்தில் பள்ளம் காணப்படுதல் * முகத்திலுள்ள தோலில் சுருக்கம் * காது மடல்கள் வடிவமைப்பு இல்லாமல் இருத்தல் * விரல்களிலும், மூட்டுகளிலும் நெருக்கம் காணப்படுதல் * கால் விரல்கள் மற்றும் கை விரல்கள் மிகக்குறைவான வடிவமைப்புடன் காணப்படும். சிகிச்சை: மல்டி மருந்து சிகிச்சை முறை 1.மல்டி பாசில்லரி லெப்ரஸி. ரிபாம்பிசிலின் 600 மி.கி. /1 மாத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். டாப்சோன் 100 மி.கி. தினசரி டோபாசிமைன் 300 மி.கி. 1 மாதத்திற்கு ஒரு முறை மற்றும் 50mg தினசரி பரிந்துரைக்கப்படுகிறது. பௌசி பேசில்லரி லெப்ரஸி: ரிபாம்பிசிலின் 450 மி.கி. 1 மாதத்திற்கு 6 மாதங்கள் வரை கொடுத்தல் டாப்சோன் 100 மி.கி. (1 - 2mg 1 kg உடல் எடையில்) 6 மாதம் வரை பரிந்துரைக்கப் படுகிறது. தடுப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை : இது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதால் - நோய்த் தொற்றை குறைப்பதற்கான வழி முறைகளை மேற்கொள்ள வேண்டும். - முழுமையான மறுவாழ்வு அளிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் - குறைப்பாடுகளின் வளர்ச்சியின் நிலைகளை தடுக்க வேண்டும். - பரவக்கூடிய சங்கிலி தொடரை நிறுத்தி, தடுக்க வேண்டும். ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்