Accessibility options
Accessibility options
Government of India
Contributor : Mariyappan08/05/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு வெண்தாமரைக் குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்து வெண்தாமரை பூ கஷாயம் குடித்துவந்தால் மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களைப் போக்க வெண்தாமரை பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட மனநோய் குணமாகும்.
வெண்தாமரை பூ, இலை, தண்டு, கிழங்கு ஆகியவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, அவற்றை நன்றாகச் சாறு பிழிந்து முக்கால் கிலோ நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாகக் கொதித்த உடன் அதை இறக்கி ஆறவைத்து, காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதைத் தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளித்துவந்தால், மனம் தெளிவடையும்.
வெண்தாமரைப் பூக்களைக் காய வைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு, அடுப்பில் வைத்துச் சுண்டக்காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்துத் தினம் இரண்டு முறை குடித்தால் மனப் பரபரப்பு சீராகும்.
வெள்ளை சங்குப்பூ செடியின் (ஸ்வேத சங்கப் புஷ்பி) வேர், பூ, காய், இலை ஆகியவற்றைக் கல்கமாக செய்து பயன்படுத்துவது, ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும். மூலிகைகளில் வெள்ளை சங்கப் புஷ்பியே சிறந்தது.
ஆதாரம் : டாக்டர் மகாதேவன்
சித்த மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள தகவல் பற்றி இங்கு காணலாம்.
தேசிய ஆயுஷ் இயக்கம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
குளியல் பொடி தயாரிக்கும் முறை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
கபத்தை வெளியேற்ற பயன்படுத்தும் மூலிகைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலிமை பெற உதவும் மூங்கில் அரிசியின் பயன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
துரை சந்திரா
7/4/2021, 11:01:26 AM
நன்றி வெண்தாமரைப் பூவை காயவைத்த பொடியை எத்தனை வயதிலிருந்து கொடுக்கலாம்1011வயதுப் பிள்ளைகளுக்கு கொடுக்கலாமா
Contributor : Mariyappan08/05/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
115