இந்நாட்களில் சரியான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது.

உடலில் கொழுப்பு அதிகரிக்க, அதிகரிக்க, இதயத்தின் நலன் தொய்வடைந்து போகிறது.

இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

எனவே, உங்கள் இதயத்தின் மீது நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, இயற்கையான, ஆயுர்வேத முறைகளை பின்பற்றி இதயத்தின் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மேலோங்க செய்யுங்கள்.

தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயத்தின் வலிமை அதிகரிக்கும்.

அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் வலுவிழந்த இதயம் ஆரோக்கியமடையும்.

பேரிக்காய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய வலிமையை அதிகரித்தும் இதயத்தின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

48 நாட்கள் வெந்நீரில் தேன் மற்றும் துளசி இலை சாற்றை கலந்து குடித்து வந்தால், இதயம் வலிமை பெரும்.

செம்பருத்தி பூவின் இலையை உலர்த்தி காயவைத்து பொடியாக்கி, அதனுடன் மருதம்பட்டை தூள் சேர்த்து, இவை இரண்டையும், சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகி வந்தால் இதயம் வலிமையடையும்

தூதுவளை காயை மோரில் ஊற வைத்து, பிறகு அதை வறுத்து உட்கொண்டு வந்தால், இதயத்தின் வலுவின்மை நீங்கி, நல்ல ஆரோக்கியம் அடையும்.

ஆதாரம் - தமிழ் போல்ட்ஸ்கை