தேசிய ஆயுர்வேத தினம், 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி (தந்தேராஸ்) அன்று கொண்டாடப்படுகிறது. முதல்முறையாக 2025ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும். உலக அளவில் ஆயுர்வேதத்திற்கு அடையாளம் கிடைக்கும் வகையில், இந்தக் குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் பூமிக்காக ஆயுர்வேதம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்று தெரிவித்த மத்திய ஆயுஷ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், ஆயுர்வேதம் என்பது வெறும் சுகாதார முறையல்ல, தனிநபர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான நல்லிணக்கக் கொள்கைகளில் வாழ்க்கையே அறிவியலாகும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்த ஆண்டு அமைச்சகம் கொண்டாடுகிறது. அதனால், பாரம்பரிய மருத்துவ முறை குறித்து நாட்டில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS), 2025 ஆம் ஆண்டில் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு நிறுவனமாக உள்ளது. அதன் 30 மையங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்