பிரயாஸ் - முதல் ஒருங்கிணைந்த நரம்பியல் மறுவாழ்வு மையம் கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பிரயாஸ் என்ற முதல் ஒருங்கிணைந்த நரம்பியல் மறுவாழ்வு மையம் செப்டம்பர் 26, 2025 அன்று திறக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம், யோகா மற்றும் நவீன சிகிச்சைகள் போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து, குறிப்பாகக் குழந்தைகளுக்கான நரம்பியல் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு முழுமையான சிகிச்சையளிப்பதே இந்த மையத்தின் நோக்கமாகும். பிரயாஸ் ஒரு முன்மாதிரியான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையமாகச் செயல்பட்டு, நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய நம்பிக்கையையும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரத்தையும் வழங்கும். மேலும், இந்த மையமானது ஆயுர்வேதம், பிசியோதெரப்பி, யோகா மற்றும் தொழில் சிகிச்சை மற்றும் நவீன குழந்தை மருத்துவம் ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கி ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்புக் குறித்த தொலைநோக்குப் பார்வையை மேலும் பலப்படுத்துகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்