யோகா பிரேக் (Y Break) என்னும் ஐந்து நிமிட யோகா நெறிமுறை செயலியை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பணியிடங்களில் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியூட்டி மீண்டும் பணியில் கவனம் செலுத்த உதவும் வகையில் யோகா பிரேக் (Y Break) செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசனங்கள், பிராணாயாம் மற்றும் தியானம் ஆகியவை அடங்கும். ஜனவரி 2020 இல் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், நாட்டின் ஆறு முன்னணி யோகா நிறுவனங்களுடன் இணைந்து மொத்தம் 15 நாட்கள் சோதனை நடத்தியது. பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகளைச் சேர்ந்த 717 பேர் பங்கேற்ற இந்த சோதனை மிகப் பெரிய வெற்றி பெற்றது. யோகா பிரேக் (Y Break) செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்