உலக மாதவிடாய் நிறுத்த தினம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச மாதவிடாய் நிறுத்த சங்கம் [International Menopause Society (IMS)], பெண்களின் மாதவிடாய் நிறுத்தம் (Menopause) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் 2009-ஆம் ஆண்டு உலக மாதவிடாய் நிறுத்த தினத்தை (World Menopause Day) அறிமுகப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 18-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் இத்தினம், மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மருத்துவ ஆராய்ச்சி, கல்வி மற்றும் ஆதரவு சேவைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. மாதவிடாய் நிறுத்தம் மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் நிலையாகும். இது பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்து ஒரு வருடம் வரையிலான காலகட்டமே பெரிமெனோபாஸ் எனப்படுகிறது. மாதவிடாய் நிறுத்தத்திற்கான இந்த மாற்றத்தின்போது, ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் வெப்பநிலை அதிகரித்தல் தூக்கக் கோளாறுகள், மனநிலை மாற்றங்கள், மூட்டு வலி, பதற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல், உளவியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஆயுஷ் அமைச்சகத்தின் முன்னெடுப்புகள் உலக மாதவிடாய் நிறுத்த தினத்தை (அக்டோபர் 18) முன்னிட்டு, மாதவிடாய் நிறுத்த காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு, பராமரிப்பு, விரிவான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை ஆயுஷ் அமைச்சகம் எடுத்துரைக்கிறது. மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் [Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS)] மூலம், உடல்நலம், மன நலம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாதவிடாய் கால ஆரோக்கியம் குறித்த சிறந்த புரிதலை மேம்படுத்த இந்த அமைச்சகம் முயல்கிறது. ஆயுர்வேதத்தில், இந்த காலகட்டத்துடன் தொடர்புடைய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆயுஷ் அமைச்சகம், இதில் ஆராய்ச்சிகளையும் அறிவியல் ரீதியான அணுகுமுறையை வலுப்படுத்துவதிலும் உறுதியாக உள்ளது. மேலும் தகவலுக்கு, மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் நோய்க்குறி (Menopausal Syndrome) குறித்த வெளியீட்டை இந்த இணைய தள இணைப்பில் காணலாம்: https://ccras.nic.in/wp-content/uploads/2024/06/Menopausal-Syndrome.pdf மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324710®=48&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்