ஆயுஷ் மருத்துவ முறைகள் / இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs, Government of India) அறிவித்துள்ளது. ஆயுஷ் முறைகள், சிகிச்சை பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஒரு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11-வது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது, அதன்படி தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுஷ் விசா வகையை அறிமுகப்படுத்துவது அரசின் ஹீல் இன் இந்தியா (Heal in India) முன்முயற்சிக்கான இந்தியாவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது இந்தியாவை ஒரு மருத்துவ மதிப்பு பயண இடமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து இந்தியாவை உலகின் மருத்துவ சுற்றுலா தலமாக மேம்படுத்த ஒன் ஸ்டாப் இந்திய ஹெல்த் கேர் டூரிசம் போர்ட்டலை உருவாக்குகின்றன. மருத்துவ மதிப்பு சுற்றுலா சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. குளோபல் வெல்னஸ் இன்ஸ்டிடியூட்டின் [Global Wellness Institute (GWI)] அறிக்கையின்படி, உலகளாவிய ஆரோக்கிய பொருளாதாரம் ஆண்டுதோறும் 9.9% ஆக வளரும் என்றும், ஆயுஷ் அடிப்படையிலான சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 70 பில்லியன் டாலராக வளரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயுஷ் சிகிச்சை முறையை தேசிய மற்றும் உலகளவில் ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல முனைகளில் செயல்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருத்துவ மதிப்பு பயணத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயல்பட இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் [India Tourism Development Corporation (ITDC)] மற்றும் இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்