முதலுதவி என்பது என்ன?

ஆபத்தான உடல்நிலையில் இருக்கும் ஒரு நபருக்கு அருகில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து உடனடியாக சிறிய அளவில் சிகிச்சை அளித்து, உடல்பாதிப்பை அதிகரிக்க விடாமல் மருத்துவரிடம் செல்லும் வரை பாதுகாப்பது முதலுதவி

முதலுதவி செய்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

நோயின் தன்மையை புரிந்து கொள்ளும் சக்தி / Good Observer

உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்துதல் (Decision, Conclusion and Action)

அருகில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்ற திறன் (Presence of Mind for using available resources)

சுற்றியுள்ள மக்களை கட்டுப்படுத்தவும், அவர்களிடமிருந்து தேவையான உதவியை பெற்றுகொள்ளம் திறன் தேவை

முதலுதவி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

முதலுதவி தருபவர் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்

இரத்தம் வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும்

முதலுதவி செய்பவர் தன் பாதுகாப்பையும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்

முதலுதவி செய்பவர் கடைபிடிக்க வேண்டிய தன் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

நீர், உணவு, தொடக்கூடிய பொருட்கள் மூலமாக உடனடியாக நோய்கள் பரவுகின்றன.

கண்ணீர், உமிழ்நீர், சிறுநீர், மலம், பிறப்பபுறுப்பிலிருந்து வரும் நீர் ஆகியவற்றால் முதலுதவி செய்பவருக்கு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, மேற்கூறியவற்றின் மூலமாகவும் இரத்தத்தில் பரவும் நோய்கள் இருப்பதால், வெறும் கையுடன் தொடக்கூடாது.

ஆதாரம் : கிராம வள மையம், தங்கச்சிமடம்