நீரிழிவு நோய்க்கான சிட்டாகிளிப்டின் (Sitagliptin) மருந்தின் பல்வேறு வகையான கலவையில் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் (Janaushadhi Kendras) கீழ் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய கலவை மருந்தை இந்திய பார்மசூட்டிகல்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி திரு. ரவி தாதிச் அறிமுகம் செய்து வைத்தார். சிட்டாகிளிப்டின் அதன் வெவ்வேறு வகை கலவையில் அனைத்து மக்கள் மருந்தகங்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும். நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த மருந்தான இது மற்ற மருந்து கடைகளை விட மக்கள் மருந்து கடைகளில் குறைவான விலைக்கு கிடைக்கிறது. மாத்திரையின் பெயர் எண்ணிக்கை விலை சிட்டாகிளிப்டின் பாஸ்பேட் ஐபி-50 மி.கி. 10 மாத்திரைகள் ரூ. 60 சிட்டாகிளிப்டின் பாஸ்பேட் ஐபி-100 மி.கி. 10 மாத்திரைகள் ரூ. 100 சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 50 மி.கி. 10 மாத்திரைகள் ரூ. 65 சிட்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு 500 மி.கி. 10 மாத்திரைகள் ரூ. 70 பிரதமர் பாரதீய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8700-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தரமான மரபுசார் மருந்துகளும், அறுவை சிகிச்சை உபகரணங்களும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இந்தக் கடைகளில் 1600-க்கும் மேற்பட்ட மருந்துகளும், 250 அறுவை சிகிச்சை உபகரணங்களும் கிடைக்கின்றன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்