மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்

மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

மருந்து வாங்குவதில் ஒரு போதும் அவசரம் காட்ட‍க் கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும்

வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.

மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.

மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். குறிப்பிட்ட‍ சில மருந்து வகைகளை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியம் அவற்றை குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜ்-ல்) வைத்திருக்க‍ வேண்டும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

மருந்துகளை சமையல் அறை, குளியல் அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.

மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.

மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

மருத்துவர் பரிந்துரையில் மட்டுமே மருந்து வாங்க வேண்டும்

ஆதாரம்: மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம்