வெங்காயத்தாள் பயன்கள்

உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளது.

வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.

வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.

காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும்.

இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.

இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப்பூ பசியை தூண்டும்.

ஆதாரம்: வெப்துனியா நாளிதழ்