உடல் பருமன்

நுண்ணுயிர்கள் உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு காரணமாகின்றன

வழக்கமாக உள்ள வளர்சிதை மாற்ற சுழற்சி 24-ஆக இருக்கும். அதை கட்டுப்படுத்தி சீராக அந்த சுழற்சியை வைத்திருப்பது மூளையும், கல்லீரலும்தான். அந்த இயல்பான சுழற்சிமுறையை இந்த நுண்ணுயிரிகள் மாற்றுவதன் மூலம் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.

எலிகளின் குடலில் அந்த நுண்ணுயிரிகளை செலுத்தி பரிசோதித்து அதில் உருவாகும் ஒருவிதமான பொருள் கல்லீரலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சுழற்சியை மாற்றி அமைக்க்க்கூடியதாக இருப்பதாகவும் , இதனால் எலிகளின் எடை கணிசமாக கூடியிருக்கின்றன.

எல்லோரின் குடற்பகுதியில் குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் அவை பாக்டீரியாவாகவோ, வைரஸாகவோ, பூஞ்சை காளான் வகையாகவோ இருக்கின்றன. இவை நம் உணவை ஜீரணிக்க வெவ்வேறு விதங்களில் உதவி செய்கின்றன.

அதேசமயம் இவைகள் சமயங்களில் மனபாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு, ஒவ்வொமை போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடக்கூடும்.

காரணம்

குடலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு காரணமாகின்றன

வழக்கமாக உள்ள வளர்சிதை மாற்ற சுழற்சி 24-ஆக இருக்கும். அதை கட்டுப்படுத்தி சீராக அந்த சுழற்சியை வைத்திருப்பது மூளையும், கல்லீரலும்தான். அந்த இயல்பான சுழற்சிமுறையை இந்த நுண்ணுயிரிகள் மாற்றுவதன் மூலம் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.

இதனை அவர்கள் எலிகளின் குடலில் அந்த நுண்ணுயிரிகளை செலுத்தி பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது உருவாகும் ஒருவிதமான பொருள் கல்லீரலின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சுழற்சியை மாற்றி அமைக்க்க்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனால் எலிகளின் எடை கணிசமாக கூடியிருப்பதை கண்டறிந்தார்கள்.

இந்த இயல்புநிலை சுழற்சியை பாதிக்க்க்கூடிய உணவுமுறை எவை என்பதில் இந்த ஆய்வாளர்கள் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்கள்.

எல்லோரின் குடற்பகுதியில் குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் அவை பாக்டீரியாவாகவோ, வைரஸாகவோ, பூஞ்சை காளான் வகையாகவோ இருக்கின்றன. இவை நம் உணவை ஜீரணிக்க வெவ்வேறு விதங்களில் உதவி செய்கின்றன.

அதே சமயம் இவைகள் சமயங்களில் மனபாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு, ஒவ்வொமை போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடக்கூடும் என்பதையே இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆதாரம்: ’செல் ஹோஸ்ட் அன்ட் மைக்ரோப்’