கொக்கோ

வெண்ணெய் மற்றும் கொக்கோ பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு கொக்கோ வெண்ணெய் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொக்கோ வெண்ணெய்யை அதிகமாக சாக்லேட், அழகு பொருட்கள் மற்றும் சில மருந்துப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

தோல் பராமரிப்பு, நோயெதிர்ப்பு சக்தி, வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும், விட்டமின் கே மற்றும் விட்டமின் இ போன்றவையும் அடங்கியுள்ளன.

கொக்கோ பீன்ஸில் இருந்து கொக்கோ வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது, எனவே இதன் சுவை, மணம் இரண்டும் கொக்கோ பீன்ஸினை போன்றே இருக்கும்.

மருத்துவ பயன்கள்

கொக்கோ வெண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம், ஆனால் இதில் அதிக கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்களான oleic acid, palmitic acid மற்றும் stearic acid இருப்பதால், இவை Radicals – களை உடல் முழுவதும் உருவாக்குகிறது.

தோலில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள், வயதான தோற்றத்தில் ஏற்படும் தடிப்புகள் போன்றவற்றிற்கு இந்த கொக்கோ வெண்ணெய்யை சாப்பிட்டால் தோல் பளபளப்பாகும்.

மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வெளியிடங்களுக்கு நாம் செல்லும்போது ஏற்படும் சுற்றுச்சூழலால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தடுக்கிறது.

தலைமுடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.

சொரியாஸிஸ், தோல் அலர்ஜி, அரிப்பு, தோல் தடிப்பு உள்ள இடங்களில் கொக்கோ வெண்ணெய்யை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு

கொக்கோ வெண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்த ஒன்றாகும், எனவே இதனை அதிகம் சாப்பிட்டால் உடற்பருமன் அதிகரிக்கும், அதுமட்டுமின்றி இதய நோயாளிகள் இதனை தவிர்ப்பது முக்கியமான ஒன்றாகும்.

ஆதாரம்: நல்வாழ்வு, மருத்துவம்