பெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய குறிப்புகள்

கால்சியம் பற்றாக்குறை வந்தால் வரக்கூடிய பிரச்சனைகள் பற்றி மக்கள் ஓரளவுக்குத் அறிவர். ஆனால் அந்த கால்சியத்திற்கு தேவையான வைட்டமின் டி பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை.

முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் கிடைக்கின்ற வைட்டமின் டி மிகவும் அரிது. அந்தச் சத்துக்கான ஒரே ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனால் வெயிலில் தலைகாட்டினால் சருமம் கருத்துவிடும், அழகு பரிப்போகும் என பலரும் வெயிலைத் தவிர்க்கிறோம். அதிகாலை சூரிய வெளிச்சத்தில்தான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை இருக்கும் வெயிலில் தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும்.

ஆனால் அந்த நேரத்தில் வெயில் அழகுக்கு எதிரி என்பதால் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்கிறோம். சன் ஸ்கிரீன் போடுவதன் மூலம் வைட்டமின் டி சத்து சருமத்திற்குள் ஊடுருவுவது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியாக இயங்க ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவில் இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் - டியும் அவசியம்..

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் அவர்களுக்குப் பிறக்கின்ற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதாக இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்தில் சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாதத்திற்கு ஒருத்தருக்கு 60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவைப்படுகிறது. ரத்தப் பரிசோதனை மூலமாக இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான அளவு இருக்கும் பட்சத்தில் மருந்துகளை நிறுத்தலாம். 35 வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இது போதிய அளவு இருப்பதன் மூலமாக முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட தவிர்க்க முடியும்.

ஆதாரம்: ஆகாஷ் குழந்தை மையம்