தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5(2019-21) அறிக்கையின்படி, பழங்குடியினப் பெண்கள் உட்பட நாட்டில் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவம் 88.6 சதவீதமாக உள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பழங்குடியினர் பகுதிகள் உட்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனை பிரசவங்களை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவமனை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது மருத்துவமனை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கான நிதி ஊக்குவிப்புத் திட்டமாகும். ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ரம் என்பது ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் இலவச பிரசவம், சிசேரியன், நோயறிதல், மருந்துகள், பிற பொருட்கள், உணவு ஆகியவற்றை வழங்கும் திட்டமாகும். பிரதமரின் சுரக்ஷித் மத்ரித்வா அபியான் என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் தரமான கர்ப்பகால பரிசோதனையை வழங்குகிறது. பிரசவ காத்திருப்பு இல்லங்கள் தொலைதூர, பழங்குடியினர் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளில் சுகாதார சேவைகள் சென்றடைவதை மேம்படுத்த தொலைதூர முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழிப்புணர்வை அதிகரிக்கவும், கர்ப்பிணிகளைக் கண்காணித்து உரிய சிகிச்சை வழங்கவும் இந்த முகாம்கள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்