விடலை/காளைப்பருவம்

உலக சுகாதார நிறுவனம் விடலைப்பருவத்தினை, 10-19க்கும் இடைப்பட்ட வயது என்றும், இப்பருவத்ததில் உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது. அவையாவன

அதிவேக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி.

உடல், சமூக மற்றும் மனரீதியான முதிர்ச்சி ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்படுவதில்லை.

பாலின சம்பந்தமான மற்றும் செய்கையில் முதிர்ச்சி

எதையும் ஆராய்ந்து பரிசோதித்தல்.

வயது வந்த வாலிபர் என்ற மனநிலையை அடைத்தல், தான் ஒரு வாலிபன் என அடையாளம் கண்டடைதல்

மற்றவர்களை சார்ந்திருத்தல் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக செயல்படும் நிலையை அடைதல்.

வளரும் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்

பருவமடைதல் (பூப்படைதல்) - இது 10லிருந்து 16 வயதிற்குள் ஏற்படுகிறது. அதாவது குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் இந்நிலையை அடைகின்றனர். உடலில், நடத்தையில் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிபப்பருவத்திற்கு மாறும் போது ஏற்படும் மாற்றங்களாவன

கைகள், கால்கள், புஜம், பாதங்கள், இடுப்பு மற்றும் மார்பு போன்றவை உருவில் பெரிதாக வளர்தல். உடலில் ஹார்மோன்கள் சுரத்தல். ஹார்மோன் என்பது ஒருவகை சிறப்பு இரசாயன தாதுப்பொருளாகும். இவை உடலில் எப்படி என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் உடல் எப்படி வளர வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகின்றன.

உடலின் அந்தரங்க உறுப்புகள் (பாலினப் பெருக்க உறுப்புகள் அவை பெரிய அளவில் உருமாறி திரவங்களை உற்பத்தி செய்கின்றன.

தோல் பகுதி அதிக எண்ணையுடன் கூடியதாக மாறும்.

கை, கால்கள் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோமங்கள் தோன்றும்.

உடலைப் பராமரிக்கத் தேவையான அடிப்படைகள்

உடலை நன்கு பராமரிக்க தேவையான சில எளிய மற்றும் அடிப்படைக் காரியங்கள் உள்ளன.

ஒருவர் வாலிபப் பருவமடையும்போது உடலில் அதிகளவு வியர்வை ஏற்படுகிறது. எனவே குளிப்பதினால் உடல் சுத்தமாகவும் நறுமணமத்துடனும் இருக்கும்

பல்சிதைவு (சொத்தைப்பல்) ஏற்படாமல் தடுத்து, சுவாச துர்நாற்றத்தைப் போக்க, குறைந்தது இரண்டு முறையாவது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

தோலில் உள்ள எண்ணை சுரப்பிகள் சீபம் எனப்படும் எண்ணைப் பொருளைச் சுரக்கும். பருக்கள் ஏற்படலாம். பருக்கள் என்பது வளரும் வாலிபப்பருவத்தில் சாதாரணமாக உண்டாகக்கூடிய ஒன்று, அவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு எந்த வழியும் கிடையாது. உடற்தோலை சுத்தமாக வைத்துக்கொள்வதே இதற்கு நல்ல தீர்வு.

சத்தான உணவு அவசியம். அதிக இனிப்பு மற்றும் எண்ணையினால் செய்யப்பட்ட மற்றும் வறுக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வதினைத் தவிர்க்கவும்.

நல்ல உடல் மற்றும் உள்ளத்திற்கான நல்ல காரியங்களையே சிந்திக்க வேண்டும்.

பெற்றோருடன் இசைந்து நடத்தல்

வளரும் பருவத்தில் பெரும்பாலான இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் பிரச்சினைகளும் வளருகின்றன. இளம் பருவத்தில் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிளய சில முக்கிய குறிப்புகள்,

குடும்பத்தின் நிலையை/ மதிப்பை சரியாய் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெற்றோரின் நம்பிக்கைகளையும் மற்றும் கண்ணியத்தையும் (மதிப்பு) நன்கு புரிந்து கொள்ள வேண்டும்,

பெற்றோர் எப்பொழுதுமே தங்கள் பிள்ளைகளில் நல்லவைகளை சிறப்பானவைகளைப் எதிர்பார்க்கின்றனர்,

பெற்றோருக்கு உண்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோரை அக்கரையோடு நடத்த வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும்.