20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் "மமோகிராம்' (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

ஆதாரம் : திணமனி