நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரத் தீர்வுகளை ஒன்றுடன் ஒன்று பரஸ்பரம் இணைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் உள்ளது. இந்த இயக்கமானது மருத்துவமனைகளின் செயல்முறைகளை எளிமையாக்குவதோடு சௌகரியத்தையும் அதிகப்படுத்தும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவார்கள். அவர்களது சுகாதார ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA) எண் ABHA எண் (சுகாதார ஐடி) என்பது 14 இலக்க எண்ணாகும். இது இந்தியாவின் டிஜிட்டல் ஹெல்த்கேர் சுற்றுச்சூழல் அமைப்பில் உங்களை தனித்துவமாக ஒரு பங்கேற்பாளராக அடையாளப்படுத்தும். இது நாடு முழுவதும் உள்ள சுகாதார வழங்குநர்கள் மற்றும் பணம் செலுத்துபவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் எண் - பயன்கள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத் திட்டத்தின் கீழ், தங்கள் ஆபா (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எண்களை மக்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களின் டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகளை அதனுடன் இணைக்கவும் முடியும். சுகாதாரச் சேவை வழங்குநர்களால் மருத்துவ அடிப்படை முடிவுகள் எடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் இது உதவும். தொலைமருத்துவம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலமும், சுகாதாரச் சேவைகளை நாடு முழுவதும் எளிதில் பெரும் வசதியைச் செயல்படுத்துவதன் மூலமும் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை இந்தப் பணி மேம்படுத்தும். ஒரு பயனர் தனது சுகாதார ஐடியை நிரந்தரமாக நீக்கலாம் அல்லது தற்காலிகமாக செயலிழக்கச் செய்யலாம். உங்கள் ABHA ஹெல்த் கார்டை ஆன்லைனில் எப்படி உருவாக்குவது தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் அட்டை / மொபைல் எண் ABHA முகவரி என்றால் என்ன? ABHA (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) முகவரி என்பது ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியாகும் (நீங்கள் நிர்ணயித்த பயனர் பெயர்). இது உங்கள் உடல்நலப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பகிரவும் அணுகவும் உதவுகிறது. உங்கள் ABHA முகவரி ‘yourname@consent manager’ போல் காணப்படும். ஆதாரம்: https://abha.abdm.gov.in/abha/v3