மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை 2023-க்கு ஏப்ரல் 26, 2023 அன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவக் கருவிகள் துறை சுகாதாரத்துறையின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது சுவாசக்கருவிகள், பிபிஇ உடைகள், என்-95 முகக்கவசங்கள் போன்றவற்றின் தயாரிப்புக்கு இந்தத்துறை மிகப்பெரும் பங்களிப்பை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு பரந்த பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பின் மூலம், நோக்கங்களை அடைவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை - 2023 மருத்துவ சாதனத் தொழில்துறையை மேம்படுத்துவதற்குப் பின் வரும் ஆறு உத்திகளைக் குறிப்பிடுகிறது:- ஒழுங்குமுறை நெறிப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்தை எளிதாக்குதல் மருத்துவ சாதனங்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்தல். மனித வள மேம்பாடு வணிகக் குறியீட்டை நிலை நிறுத்துதல் மற்றும் விழிப்புணர்வு உருவாக்கம் மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை மூலம் பொதுசுகாதார நோக்கங்களான எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் தரமானதாக கிடைத்தல், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும். சீரான வளர்ச்சிக்கும் இது உதவும். உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, மருத்துவக் கருவிகள் உற்பத்தியை மேற்கொள்வது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கும். நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறையை துரிதப்படுத்துவதோடு, உலகளாவிய சந்தையில் மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கினை அடுத்த 25 ஆண்டுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கருவிகள் துறையின் தற்போதுள்ள 11 பில்லியன் டாலர் என்பதிலிருந்து 50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்