மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு சீரான நெறிமுறை மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு சீரான நெறிமுறை 2015 என்ற முந்தைய நிலைக்கு மாற்றாக, மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு புதிய சீரான நெறிமுறையை 12.03.2024 அன்று மருந்துத் துறை (Department of Pharmaceuticals) அறிவித்தது. இந்தக் நெறிமுறை பின்னர் செப்டம்பர், 2025-ல் திருத்தப்பட்டது. இந்த நெறிமுறையின் நகல், https://pharma-dept.gov.in/policy/uniform-code-pharmaceutical-marketing-practices-ucpmp-2024-reg என்ற மருந்துத் துறையின் இணையதளத்தில் கிடைக்கும். மருந்து நிறுவனங்களின் நெறிமுறை சார்ந்த சந்தைப்படுத்தல் நடைமுறைகளை நிர்வகிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இவற்றில், மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான நெறிமுறைக் குழுக்களை அமைத்தல், மருந்து நிறுவனங்களால் நெறிமுறை அதிகாரிகள் நியமிக்கப்படுதல், கட்டமைக்கப்பட்ட புகார் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு அமைப்பு, இணக்கம் குறித்த சுய அறிவிப்புகளை சமர்ப்பித்தல் பரிந்துரைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் செலவினங்களை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும். விளம்பரச் செயல்பாடுகள் தொடர்பாக மருந்து நிறுவனங்களுக்கும் சுகாதார நிபுணர்கள்/சுகாதார நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகளை நிர்வகிக்கும் மேம்படுத்தப்பட்ட விதிகளையும் இந்த நெறிமுறைகள் கொண்டுள்ளன. நிறுவனங்கள் தொடர்புடைய தளத்தில் தாங்கள் செய்த சந்தைப்படுத்தல் செலவினங்கள் குறித்த வருடாந்தர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம், செயலாக்கம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகளை 2025-ல் அறிவிக்கப்பட்ட திருத்தங்கள்,மேலும் நெறிப்படுத்தின. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288768®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்