ஆரம்ப நிலை மூச்சு பயிற்சிகள் எப்படி பண்ணலாம் என்பதை குறித்த பதிவு. முதுகு பகுதியை நேராக வைக்கவும். கைகள் எல்போ ரெண்டையும் நேராக வைக்கவும். கண்களை மூடி கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரவும். மெதுவாக மூச்சு காற்றை உள்ள இழுத்து, மெதுவாக மூச்சு காற்றை வெளியே விடுங்க. இதே மாதிரி ஒரு 10 ரவுண்ட்ஸ் பண்ணுங்க. அடுத்தது மெதுவாக உங்களுடைய கையை உங்களுடைய நெஞ்சு பகுதியோட மேல் பகுதியில வைக்கவும். அதே மாதிரி நல்லா மூச்சை உள்ள இழுங்க. மெதுவாக மூச்சை வெளியே விடுங்க. இதில் எதுவுமே நம்ம வேகமா பண்ணக்கூடாது. எவ்வளவு மெதுவாக பண்றோமோ, அந்த அளவுக்கு நல்லது. 10 ரவுண்ட்ஸ் பண்ணுங்க. அதே மாதிரி அடுத்தது உங்களோட வயிற்றோட கீழ் பகுதியில கைகளை வைக்கவும். திருப்பி அதே மாதிரிதான். மூச்சு பகுதியை நல்லா உள்ள இழுங்க. மூச்சை நல்லா வெளியே விடுங்க. 10 ரவுண்ட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம், கைகளை ஸ்ட்ரைட்டா வச்சுட்டு, ஒரு 10 செகண்ட்ஸ் அமைதியா உட்காருங்க. இப்போ திருப்பி உங்களோட கையை வந்து, உங்களோட நெஞ்சோட நடுப்பகுதியில வைங்க. அதே மாதிரி நல்லா மூச்சை உள்ள இழுங்க. மூச்சை உள்ள இழுக்கும்போது நெஞ்சு பகுதி விரிவடைவதை நீங்க உணரனும். 10 ரவுண்ட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம், உங்களுடைய வயிற்றோட கீழ் பகுதியில வச்சுக்கங்க கைகளை. திருப்பி நல்லா மூச்சை உள்ள இழுங்க. இழுக்கும்போது உங்கள் வயிற்றுப் பகுதி நல்லா வெளியே நோக்கி வரணும். மூச்சை வெளியே விடும்போது, உங்களோட வயிற்றுப் பகுதி உள்நோக்கி போகணும். இந்த மூவ்மென்ட்டை நீங்க ஃபீல் பண்ணி பண்ணனும். 10 ரவுண்ட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம், திருப்பி நீங்க அமைதியா உட்காருங்க. நார்மலா மூச்சை உள்ள இழுத்து, நார்மலா மூச்சை வெளியே விடுங்க. முடிச்சதுக்கு அப்புறம், முதுகு பகுதியை நேரா வச்சுக்கங்க. கைகளை ரப் பண்ணிக்கங்க. கண்ணு மேல வச்சுக்கங்க. ரிலாக்ஸ் பண்ணிக்கங்க. இந்த பயிற்சிகளை பிராணாயாமம் போறதுக்கு முன்னாடி (பிரிப்பரேஷன் மெத்தட் மாதிரி) இதை பண்ணலாம்.