மன அமைதிக்கான என்னென்ன மாதிரி யோகா பயிற்சிகள் நம்ம பண்ணலாம்? ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்துல, மன அமைதிங்கிறது ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால யோகா மூலமா எப்படி மனதை அமைதிப்படுத்தலாம் enpatahip பத்தி இந்த பதிவுல பார்க்கலாம். சுகாசனம் என்பது தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிக்கான அடிப்படை மற்றும் எளிமையான யோகாசனமாகும். இது முதுகுத்தண்டை வலுப்படுத்தி, மன அமைதியைத் தருகிறது. செய்முறை: தரையில் யோகா பாய் விரித்து, கால்களை நீட்டி நேராக அமரவும் (தண்டாசனம்). வலது காலை மடக்கி, இடது தொடைக்கு அடியிலும், இடது காலை மடக்கி வலது தொடைக்கு அடியிலும் வைக்கவும் (சம்மணம் போட்டு அமர்தல்). முதுகெலும்பு, கழுத்து மற்றும் தலை நேராக இருக்க வேண்டும். கைகளை முழங்கால்களின் மீது ஞான முத்திரையில் (ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரல் நுனிகள் தொடுமாறு) வைக்கவும். கண்களை மூடி, ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு, உடல் மற்றும் மனதை தளர்த்தவும். குறிப்பு: முதுகு வலி உள்ளவர்கள், இடுப்பிற்கு அடியில் ஒரு மெல்லிய தலையணை அல்லது யோகா பிளாக் வைத்து அமர்வது வசதியாக இருக்கும். முடிந்த அளவு இந்த பயிற்சியை காலையில், உங்க காலை கடமைகளை எல்லாம் முடிச்சதுக்கு அப்புறம் செய்றது ரொம்பவே நல்லது. அமைதியான இடத்தில் செய்தல் நல்லது 10 - 20 முறை இதை செய்யலாம் சவாசனம் - ஆசனங்களிலேயே மிக மிக முக்கியமானது இந்த சாந்தி ஆசனம். யோகாசனம் செய்யும்போது, இடையிடையே இந்த சாந்தி ஆசனத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு அடுத்த ஆசனத்தைத் தொடரலாம். செய்முறை ஒரு விரிப்பின் மீது அமர்ந்து, இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து, பிறகு மல்லாந்து படுக்கவும். ஆங்கில எழுத்து 'வி' வடிவில் கால்களை விரித்து, தளர்வாக்கவும். கைகளையும் உடம்பின் இரு பக்கவாட்டுகளில் விரித்துத் தளர்த்திக்கொள்ளவும். கண்களை மூடி, சீராக மூச்சு விட வேண்டும். மூச்சு, இயல்பாக இருக்கட்டும். அப்படியே சில நிமிடங்கள் படுத்திருக்கவும். பிறகு, கால்களைச் சேர்த்து, கைகளையும் உடலோடு சேர்க்கவும். மீண்டும், இடதுபுறம் திரும்பி, ஒருக்களித்துப் படுக்கவும். இடது கையைத் தலைக்கு மேலே நீட்டி, வலது கையை முன்புறம் வைத்து ஊன்றி, எழ வேண்டும். குறிப்பு: மல்லாந்து படுத்தபடி எழுந்திருக்கக் கூடாது. எப்போதுமே இடதுபுறம் திரும்பிப் படுத்து, இடதுபுறமாகத்தான் எழுந்திருக்க வேண்டும்.