கம்பு கொழுக்கட்டை தேவையான பொருட்கள் கம்பு - 1 கிலோநிலக்கடலை - 100 கிராம்பொட்டுக்கடலை - 50 கிராம்வெல்லம் - 3/4 கிலோபுழுங்கல் அரிசி - 1/2 கிலோதேங்காய் - 1ஏலம் - 25 கிராம் செய்முறை முதலில் கம்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, புழுங்கலரிசி ஆகியவற்றை கல் மண் நீக்கி சுத்தம் செய்து பின் பொன் வறுவலாக வறுத்து மிஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவேண்டும். பின் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வெல்லத்தை சிறிது கொதிக்கும் தண்ணீரில் கரைத்து வடிகட்டி மாவில் சேர்க்க வேண்டும். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து இணை உணவாகக் கொடுக்கலாம், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடலாம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை