கேழ்வரகு அடை தேவையான பொருட்கள் கேழ்வரகு – அரை கப்பொரிகடலை - 100 கிராம்முருங்கைக் கீரை - ஒரு கட்டுதேங்காய் துருவல் - ஒரு கப்பச்சை மிளகாய் - 5வெங்காயம் - 150 கிராம்கேரட் துருவல் - 150 கிராம் செய்முறை பொரி கடலையை மிக்ஸியில் பொடி செய்யவும். முருங்கைக் கீரையை சுத்தம் செய்து கழுவி பின் கேரட் துருவல், பச்சை மிளகாய், சிறிதளவு நறுக்கிய வெங்காயம், கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் தோசைக்கல்லில் சப்பாத்தி போல தட்டி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு கருகாமல் எடுக்கவும். அடைக்கு புதினா, மல்லி, தேங்காய் வதக்கி மிளகாய், வெள்ளைப்பூண்டு சேர்த்து சிறிது புளியுடன் துவையல் செய்து சாப்பிட சுவை கூடும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை