சோளமாவு ரொட்டி தேவையான பொருட்கள் சோளமாவு - ஒரு கப்கடலை மாவு - ஒரு கப்வெங்காயம் - 100 கிராம்முருங்கைக் கீரை - 1 கைப்பிடிஎண்ணெய் - அரை தேக்கரண்டிதண்ணீர் - 150 மில்லிஉப்பு - தேவைக்கேற்ப செய்முறை சோளமாவையும் கடலை மாவையும் தனித்தனியே வாணலியில் இட்டு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த பின் இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து இதில் ஆய்ந்து கழுவிய முருங்கைக் கீரை, நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி மாவை சிறு வடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் இட்டு இருபுறமும் நன்கு வெந்தபின் எடுக்க வேண்டும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை