தினை கொழுக்கட்டை தேவையான பொருட்கள் தினை - ஒரு கப்பச்சை மிளகாய் - மூன்றுபெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்சீரகம் - ஒரு டீஸ்பூன்கடுகு - ஒரு டீஸ்பூன்தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதுஉப்பு - தேவையான அளவு செய்முறை தினையை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பெருங்காயத் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு, தேங்காய் துருவல், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதித்து வரும் போது உடைத்த தினை ரவையை சேர்த்துக் கிளறவும். கலவை நன்றாக கெட்டியானதும் அடுப்பை அணைத்து இறக்கவும். பின்னர் கொழுக்கட்டைகளாகப் பிடித்து 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை