வரகு கார ஆப்பம் தேவையான பொருட்கள் வரகு - 200 கிராம்உளுந்து - 50 கிராம்தேங்காய் - ஒரு மூடிமோர், இஞ்சி, குடமிளகாய் - சிறிதளவுவெங்காயம், உப்பு - சிறிதளவு செய்முறை ஊறிய பிறகு உளுந்தை நீர் ஊற்றி அரைத்து மாவாக்கவும். அத்துடன் தேங்காய், இஞ்சி, குடமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து அரைக்கவும். மோர் விட்டு கலக்கி நான்கு மணி நேரம் கழித்து குழிவான ஆப்பச் சட்டியில் சுட்டு எடுக்கவும். மேல்பக்கம் மூடியும் மூடாமலும் தோசை, ஆப்பம் போல் செய்யலாம். ஒரு பக்கம் மட்டும் வேகும். இதுவும் ஆவியில் வெந்த உணவு போல் இருக்கும். முதலில் சிறிது எண்ணெய்யை சட்டியில் தடவினால் ஒட்டாமல் வரும். இது போல் தினை, குதிரைவாலி, சாமையிலும் கார ஆப்பம் செய்யலாம். வெல்லம் சேர்த்து இனிப்பு ஆப்பங்கள் செய்யலாம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை