வரகு / குதிரைவாலி இட்லி - தோசை தேவையான பொருட்கள் குதிரைவாலி / வரகு அரிசி - 750 கிராம்உளுந்து - 250 கிராம்வெந்தயம் - 20 கிராம்உப்பு - தேவையான அளவு செய்முறை வரகு அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஊற வைத்த பின் நன்றாக அரைத்து மாவு செய்து கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து 12 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்றாக கலக்கி இட்லித் தட்டில் மாவை ஊற்றி வேக வைக்கவும். மாவை தோசைகளாக வார்த்து எடுக்கவும். பிறகு சூடாக சட்னியுடன் பரிமாறவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை