அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயுதப் படைகளில் புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்கான நுழைவு வயது 17 ½ - 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியமர்த்தலை மேற்கொள்ள இயலாத காரணத்தால், 2022-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணியமர்த்தல் சுழற்சிக்கு ஒருமுறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 2022-ஆம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தல் நடைமுறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்