பராக்ரம தினமாகக் (Parakram Diwas) கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான சன்வரி 23, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்றுச் சிறப்பை நினைவில் கொள்ளும் வகையிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெருமைகளை உணர்வதற்கும் ரோஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்று பிரதமர் 2018-ல் அங்கு பயணம் மேற்கொண்ட போது பெயர் மாற்றம் செய்தார். நெய்ல் தீவு மற்றும் ஹாவ்லாக் தீவு போன்றவற்றுக்கு ஷாஹித் தீவு மற்றும் சுராஜ் தீவும் என்றும் மறு பெயர் சூட்டப்பட்டது. நம் நாட்டின் நிகழ்கால பராக்ரமசாலிகளுக்கு உரிய மரியாதை வழங்குவதற்கு நமது பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார். இந்த உணர்வை மனதில் ஏந்தியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைப்பதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தத் தீவுகளில் மிகப் பெரிய தீவிற்கு முதல் முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும் இரண்டாவது பெரிய தீவிற்கு 2-வது முறையாக பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த வகையில், அனைத்து 21 தீவுகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைக் காப்பதற்கு தன்னுயிர் வழங்கிய நமது வீரர்களுக்கு என்றென்றும் மரியாதை செலுத்தும் வகையில் இது அமையும். பெயரிடப்படாத இந்தத் தீவுகளுக்கு 21 பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களான மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் ராணுவ தளபதி கரம்சிங் எம் எம், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் ராமரகோப ரானே, நாயக் ஜதுநாத் சிங், கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங், கேப்டன் ஜி எஸ் சலாரியா, லெஃப்டினெனட் கர்னல் தன்சிங் தாப்பா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைட்டான் சிங் சிக்யூஎம்எச், அப்துல் அமீது, லெஃப்டினென்ட் கர்னல், அர்தேஷிர் புர்ஜோர்ஷி தாராப்பூர், லான்ஸ் நாயக் அல்பெர்ட் யெக்கா, மேஜர் ஹோஷியர் சிங், 2-வது லெஃப்டினென்ட் ஜெனரல் அருண் கேட்ரப்பால், விமானப்படை அதிகாரி நிர்மல்ஜித் சிங் ஷக்கான், மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பாணா சிங் கேப்டன் விக்ரம் பத்ரா, லெஃப்டினென்ட் ஜெனரல் மனோஜ்குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், சுபேதார் மேஜர் (ஓய்வு) கிரணடியெர் யோகந்தர்சிங் யாதவ் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்