தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடங்கி வைத்தது. ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தைக்கும் தடுப்பு மருந்து வழங்குவதற்காக தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0-ஐ செயல்படுத்தப்படும். 2021 பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 22-ல் தொடங்கப்பட இருக்கும் இரண்டு சுற்றுகளை கொண்ட தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0, நாடு முழுவதுமுள்ள 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்ட 250 மாவட்டங்கள்/நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும். கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் போது தடுப்பு மருந்துகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீது கவனம் செலுத்தபப்டும். 15 நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளில் அவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும். புலம்பெயர்ந்த பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் தொலைதூர இடங்களை சேர்ந்தோர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.